1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் : 3வது அலையை சந்திக்க அரசு தயார்

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி:''நாடு முழுதும் 'பி.எம்.கேர்ஸ்' நிதி வாயிலாக, 1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருவதையடுத்து, பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பத் துவங்கியுள்ளது. இரண்டாவது அலை பரவல் ஏப்ரல், மே மாதங்களில் மிக அதிகமாக இருந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 3வது அலையை சந்திக்க அரசு தயார்

புதுடில்லி:''நாடு முழுதும் 'பி.எம்.கேர்ஸ்' நிதி வாயிலாக, 1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.


கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருவதையடுத்து, பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பத் துவங்கியுள்ளது. இரண்டாவது அலை பரவல் ஏப்ரல், மே மாதங்களில் மிக அதிகமாக இருந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இரண்டாவது அலை பரவல் குறைந்துள்ள நிலையில் மூன்றாவது அலை ஆகஸ்டில் தாக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக, உயர் மட்டக்குழுவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்தும் அவர் ஆலோசித்தார்.


இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்கள் வாரியாக ஆக்சிஜன் தேவை, வினியோகம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு முழுதும் பி.எம்.,கேர்ஸ் நிதி வாயிலாக, 1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன; இது பயன்பாட்டிற்கு வரும் போது கூடுதலாக 4 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும். ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆக்சிஜன் மையங்களை பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை மருத்துவமனை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-ஜூலை-202118:02:19 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என்னதான் அரசு முயற்சித்தாலும் தப்ளிக்கிகளும் பெங்களூரில் பெட் க்களை பிளாக் செய்தவர்களும் நாட்டில் சீர்குளைப்பு ஏற்படுத்தி அவர்களின் சொந்த நாட்டிற்கு புள்ளரிப்பு ஏற்படுத்துவார்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
10-ஜூலை-202111:51:38 IST Report Abuse
Dhurvesh :Hello Sir What a wonderful Ministry - 12 அமைச்சர்கள் 12-ம் வகுப்புக்குள்ளாகவே படித்தவர்கள். 8-ம் வகுப்புவரை படித்தவர்கள் 2 பேர் 10-ம் வகுப்புவரை படித்தவர்கள் 3 பேர் 12்-ம் வகுப்புவரை படித்தவர்கள் 5 பேர் 90 சதவீதம் பேர் அதாவது 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். 42 சதவீதம் பேர் மீது அதாவது 33 அமைச்சர்கள் மீது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 31 சதவீத அதாவது 24 அமைச்சர்கள் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகளான கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. What a Great Ministry was formed by Mr. Modi - Every Indian should be proud of this ministry.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-ஜூலை-202112:19:56 IST Report Abuse
Sanny , இந்த அமைச்சர்கள் எங்கே நல்லா யோசிப்பாங்க, செயல் திட்டம் வகுப்பாங்க, எல்லாம் அவங்க உதவியாளர்களும், இணை அமைச்சர்களும் மண்டையை போட்டு குடைந்து ஒரு திட்டத்தை தயாரிப்பாங்க, அதுக்குப்பிறகு அமைச்சர் தனக்கு எவ்வளவு பங்கு கட்டிங் என்பதை பொறுத்து கையெழுத்துப்போடுவாங்க, இதுதான் அரசியல். 12 ஆம் கிளாஸ், 8 கிளாஸ் எல்லாம் Too Much.3 ஆம்வகுப்பு படித்து கைநாட்டுப்போடாமல் பெயரை மட்டும் எழுத முடிந்தால் போதும்....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஜூலை-202108:38:40 IST Report Abuse
blocked user கண்டமேனிக்கு கணக்குச்சொல்லும் எதிரிக்கட்சி ஆளும் மாநிலங்களை நீதிமன்றத்தில் வைத்துத்தான் கையாள முடியும். டெல்லி போல நாலு மடங்கு கேட்டால் மற்ற மாநிலங்களை கையாள்வது சிரமம்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
10-ஜூலை-202112:51:03 IST Report Abuse
DhurveshCORPORATE KAARAN வருமனதிற்கு வரி வெறும் 3% ஆனால் நாம் PETRol அடகவிலை 33 அனால் 66% வரி கட்டுகிறோம் ஒரு லிட்டர் க்கு அதே போல GAS அடகவிலை 350 அனால் 166% வரி கட்டுகிறோம் ஒரு சிலிண்டர்க்கு, இவ்வவ்ளு வரி நாம் கட்டுவது CORPORATE காரன் நஷ்டம் அடைய கூடாது அல்லவ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X