பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் :'வாட்ஸ் ஆப்' நிறுவனம்

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'எங்களது புதிய தனியுரிமை கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்ற செயலியை, நம் நாட்டில் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி, 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனத்துடன் கடந்த ஆண்டு
பயனாளர்கள், கட்டாயம், : உயர்நீதிமன்றம் வாட்ஸ் ஆப் விளக்கம்

புதுடில்லி: 'எங்களது புதிய தனியுரிமை கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்ற செயலியை, நம் நாட்டில் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி, 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனத்துடன் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. இதையடுத்து, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும், 'பிரைவசி பாலிசி' எனப்படும் தனியுரிமை கொள்கையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் பல மாற்றங்களை அறிவித்தது.




கடும் எதிர்ப்பு



இதன்படி, வாட்ஸ் ஆப் பயனாளர்கள் குறித்த தகவல்களை, தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள பயனாளர்களின் அனுமதியை கோரியது.இந்த மாற்றம் பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பயனாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டது.புதிய கொள்கையை நடைமுறைபடுத்தும் திட்டத்தை, மே 15 வரை வாட்ஸ் ஆப் ஒத்திவைத்தது.

பின், மேலும் ஒரு வாரம் அது நீட்டிக்கப்பட்டது. 'பெரும்பாலான வாட்ஸ் ஆப் பயனாளர்கள் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளாத பயனாளர்களின் கணக்குகள் நீக்கப்படாது' என, வாட்ஸ் ஆப் தெரிவித்தது.இது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அப்போது தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக, தங்கள் தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்து, அதை ஏற்றுக் கொள்ளுமாறு பயனாளர்களை வாட்ஸ் ஆப் கட்டாயப்படுத்துவதாக, மத்திய அரசுதெரிவித்தது.




நோட்டீஸ்



புதிய தனியுரிமை கொள்கை குறித்து விரிவான தகவல்களை அளிக்கும்படி, சி.சி.ஐ., எனப்படும், இந்திய போட்டி கமிஷன், வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை எதிர்த்து, வாட்ஸ் ஆப் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.சி.ஐ., நோட்டீசுக்கு தடை விதிக்க, டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே மறுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் ஆப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறியதாவது:தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். அதை ஏற்றுக் கொள்ளாதவர்களின் வாட்ஸ் ஆப் செயல்பாடுகள்குறைக்கப்படாது.

புதிய கொள்கை குறித்து பயனாளர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டும் பணி மட்டும் தொடரும்.தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, இந்த நிலை தொடரும்.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, விரிவான தகவல்களை சி.சி.ஐ., கேட்கிறது.ஒருவேளை தகவல் பாதுகாப்பு சட்டத்தில் எங்கள் புதிய தனியுரிமை கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டால், சி.சி.ஐ.,யின் விசாரணைக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியஅவசியம் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujan - Nagercoil,இந்தியா
10-ஜூலை-202114:38:10 IST Report Abuse
Ramanujan ஆனால் அடிக்கடி நிபந்தனைகளை ஒத்துக்கொள்ள செய்தி பிளாஷ் ஆகி கொண்டே இருக்குமாம். தப்பி தவறி ஒரு தடையாவது ஆமாம் கிளிக் செய்ய மாட்டார்களா என்று. ஏற்கனேவே விருப்பம் இல்லாமல் ஒத்து கொண்டவர்கள் பின் வாங்க வழி இருக்கிறதா? அப்படியே பின் வாங்கினாலும் இந்நேரம் நம் தகவல் எல்லாம் உலகம் முழுதும் பறந்து இருக்கும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஜூலை-202110:37:30 IST Report Abuse
blocked user வாட்ஸாப்பை பேஸ்புக் விலைக்கு வாங்கிவிட்டது. பின்னர் எப்படி தகவல்களை பறிமாறிக்கொள்ள மாட்டோம் என்று உறுதி கூற முடியும்? பொய் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X