சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் விரும்பியபடி ஆட்சிமாற்றம் தற்கொலை செய்த தி.மு.க., அனுதாபி

Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கரூர் : 'தான் விரும்பியபடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறேன்' என, முன்னாள் போக்குவரத்து ஊழியர் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை கள்ளப்பாலியை சேர்ந்தவர் உலகநாதன் 60; அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர். தி.மு.க., அனுதாபி. இவர் நேற்று காலை 11:30 மணிக்கு

கரூர் : 'தான் விரும்பியபடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறேன்' என, முன்னாள் போக்குவரத்து ஊழியர் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.



latest tamil news


கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை கள்ளப்பாலியை சேர்ந்தவர் உலகநாதன் 60; அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர். தி.மு.க., அனுதாபி. இவர் நேற்று காலை 11:30 மணிக்கு மண்மங்கலம் ஸ்ரீ புதுகாளியம்மன், புதுசங்கிலி கருப்பண்ணன் கோவிலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உலகநாதன் எழுதிய இரண்டு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் அறிவித்தவுடன் ஆட்சி மாற்றம் வர வேண்டும். முதல்வராக ஸ்டாலின், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றிவாகை சூடி, அமைச்சராக வேண்டும் என, மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். நான் செய்யும் பிரார்த்தனை நிறைவேற்றுதல், என் சுய நினைவுடன் இறப்பை தேடுகிறேன். என், இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்தில், வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். அவரை கரூர் மாவட்டத்துக்கு மாற்றம் செய்து, அமைச்சரின் நேரடி பார்வையில் வைத்து கொள்ளுங்கள். இதுமட்டும் என் இறுதி ஆசை. இவ்வாறு கடிதத்தில் உள்ளது.


latest tamil news



உலகநாதனுக்கு நித்யா என்ற மனைவி, செங்கோட்டுவேல், குமரகுரு ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமரகுரு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார்.ஸ்ரீ புதுகாளியம்மன், புது கருப்பண்ண சுவாமி கோவில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் விருப்பமான கோவிலாகும். அவர் இக்கோவிலுக்கு தவறாமல் செல்வது வழக்கம்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஜூலை-202105:24:24 IST Report Abuse
meenakshisundaram இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் -கட்சிக்கு பெயர் வாங்கிக்கொடுக்க யாரேனும் செய்த காரியமா என்று சுதந்திரம் பெற வேண்டுமானால் நாட்டினுக்காக உயிரை ஈந்தவர்கள் உண்டு ,ஆனா?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-ஜூலை-202114:24:16 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கண்டிப்பாக சி பீ ஐ விசாரிக்கவேண்டும் ..தூண்டுதல் அல்லது வேற பிரச்சனை இருக்கும் நிச்சயமா ..இதே போல் கழகஅப்பாவி தொண்டர்கல் மரணம் அடைகிறார்கள் இல்லை பலி கொடுக்கப்பட்டுள்ளன ..மனித நேயம் இல்லாத தலைமைகளால் இது நடக்கிறது ..எந்த கட்சியிலாவது அந்த தலைமை குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு உயிரை விட்டார்களா ,,நிச்சயம் மத்திய அரசு இந்த மரணத்தை விசாரிக்கவேண்டும்
Rate this:
Cancel
10-ஜூலை-202111:09:05 IST Report Abuse
ராமகிருஷ்ணன் திமுக ஆட்சிக்கு வந்தால் இருப்பதை விட இறப்பது மேல் என்ற முடிவைத்தான சொல்லி இருக்கிறார்கள் அல்லது அனுதாபத்தினால் பணம் எதிர்பார்த்து செய்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X