லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (131) | |
Advertisement
சென்னை : தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி, நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்படும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாக பணிகளை, மேலாண் இயக்குனர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிகண்டனும்,
Leoni, Dindigul Leoni, TN Textbook Corporation

சென்னை : தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி, நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.

தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்படும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாக பணிகளை, மேலாண் இயக்குனர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிகண்டனும், உறுப்பினர் செயலர் பொறுப்பில் உள்ள இயக்குனர் நாகராஜ முருகனும் மேற்கொள்கின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், பாடநுால் கழக தலைவராக, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனியை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்கும் முன், அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு, பள்ளி கல்வி பதவியா' என, எதிர்ப்புகள் எழுந்தன.

நேற்று அமாவாசை நாள் என்பதால், காலை பதவியேற்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு, பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. வராததற்கான காரணமும், பாடநுால் கழகத்துக்கு, லியோனி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.


லியோனி நியமனத்தை ரத்து செய்க: ஓபிஎஸ்


சென்னை:'பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டிருப்பது, அந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து உள்ளது.இதனால், அந்த கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாக பேசுவது; அரசியல் கட்சி தலைவர்களை நா கூசும் வகையில் வசைபாடுவது; நாகரிகமற்ற, தவறான, ஒழுக்கமற்ற கருத்துகளை, மக்கள் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை, வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி.
இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் வழியே, தவறான கருத்துகள், மாணவ - மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப் படும்.எனவே, தமிழக மாணவ - மாணவியர் நலன் கருதி, நல்ல கருத்துகள் மாணவ - மாணவியரை சென்றடைய, இந்த நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
15-ஜூலை-202109:17:09 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) POLTITICS COUNTS MORE
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
12-ஜூலை-202121:45:30 IST Report Abuse
bal இந்த பெயர் என்ன லியோனி...ஸ்டாலின்...இவனுக தமிழனுங்களா...இந்த திமுக ஜால்ராவுக்கு எதற்கு இந்த பதவி...குட்டி சுவராகிவிடும்...தமிழ் பாடங்கள்...
Rate this:
Venkatakrishnan - Mumbai,இந்தியா
15-ஜூலை-202119:12:45 IST Report Abuse
Venkatakrishnan"பால்" என்பது தமிழ் வார்த்தையா? சங்கிகளா......
Rate this:
Cancel
Gopalkrishnan GS Secunderabad - Hyderabad,இந்தியா
12-ஜூலை-202116:08:17 IST Report Abuse
Gopalkrishnan GS Secunderabad ஓபிஎஸ் சொன்னது சரி. பட்டிமன்ற புகழ் தவிர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. சாலமன் பாப்பையா போன்ற முதிர்ந்த கல்வியாளர்கள் இவர்களுக்கு கிடைக்கவா இல்லை. பட்டி மண்டபங்களின் முன்னோடி அவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியர், முதல்வர். உங்களுக்கு இவர் கூடவா கண்ணுக்குப் புலப்படவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X