நிபுணர் குழுக்களில் தகுதி, நேர்மை; அரசு பரிசீலிக்க ஐகோர்ட் அறிவுரை

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : நிபுணர் குழுக்களில் நேர்மையான தகுதி படைத்தவர்களை நியமிக்கவும் வெளிப்படைத்தன்மை இருக்கவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.உதயநிதி 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர். தமிழில் பெயர் உள்ள படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த நிறுவன தயாரிப்பின் சில படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு
High Court,Red Giant Movies, Udhayanidhi Stalin,Udhayanidhi, ஐகோர்ட்

சென்னை : நிபுணர் குழுக்களில் நேர்மையான தகுதி படைத்தவர்களை நியமிக்கவும் வெளிப்படைத்தன்மை இருக்கவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உதயநிதி 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர். தமிழில் பெயர் உள்ள படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த நிறுவன தயாரிப்பின் சில படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கவும் படங்களை பார்த்து பரிந்துரைப்பதற்கு புதிய குழுவை அமைக்கவும் கோரி ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரபட்சமின்மையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்பட்டது. கேளிக்கை வரி விலக்கு நிராகரிக்கப்பட்டதற்கு அந்தப் படங்களில் உதயநிதி நடிகராக இருந்ததும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் அப்படியே ஒதுக்கி விட முடியாது. பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகிப்பவர்கள் சாதக பாதகமாக நடந்து கொள்ளும் துரதிருஷ்டவசமான போக்கு இங்கு உள்ளது.ஊழல் நடவடிக்கைகள் சாதகம் காட்டுவது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. இதை அனுமதித்தால் சாதாரண மக்கள் துன்பப்படுவர்; சமூக நீதி என்ற லட்சியத்தை நோக்கி நம்மால் அணிவகுக்க முடியாது.அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் நியாயமாக செயல்பட வேண்டும்; மக்கள் நலன்களுக்காகவே இயங்க வேண்டும்.

அரசு அன்றாடம் பல்வேறு நிபுணர் குழுக்களை நியமிக்கிறது; அரசு பதவிகளில் நியமனங்களை மேற்கொள்கிறது. அரசு நிர்வாகத்தில் நடப்பதை எல்லாம் கவனிக்காமல் நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு இருக்காது. இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லாததால் நிவாரணம் கோரியதை பரிசீலிக்க இயலாது. காலம் கடந்து விட்டதால் ஏற்கனவே முடிந்து விட்டதை ரத்து செய்ய விரும்பவில்லை.அரசு அமைப்புகள் நிறுவனங்கள் நிபுணர் குழுக்களில் நியமனம் நடக்கும்போது நேர்மையானவர்களை தகுதியானவர்களை பரிசீலிக்க வேண்டும்.

தகுதியானவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நியமனங்கள் இருக்க வேண்டும்.அரசியல் மாச்சரியங்கள் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நியமனங்கள் இருக்க வேண்டும். நிபுணர் குழுக்களில் தங்கள் ஆட்களை அரசியல் கட்சிகள் நியமித்தால் அதை தொடர அனுமதித்தால் சமூக நீதி சமத்துவத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும்.எனவே குழுக்கள் நியமனம் படங்களுக்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து விருப்பு வெறுப்புக்கு வழி வகுக்காமல் கொள்கை முடிவை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
12-ஜூலை-202110:00:37 IST Report Abuse
Nakkeeran திமுகவை பொறுத்தவரை யார் மோடியையும் எடப்பாடி மற்றும் அவர் குடும்பத்தாரையும் அதிகமாக வசைபாடுகிறாரோ அவர்களுக்கே பதவி உதாரணம் ரகுராம் ராஜன், ஜெயரஞ்சன் லியோனி. தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் முக அவர்களுக்கு பிடித்தமான மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு தேசிய விருது கொடுத்தால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
10-ஜூலை-202122:19:53 IST Report Abuse
s t rajan கல்வியைப் பற்றியும் அந்தரங்க விஷயங்களை பட்டிமன்றத்தில் பேசும் கொச்சை தமிழனை பள்ளிக் கல்வி பாடம் சம்பந்தப்பட்ட நிறுவத்தினத்திறகு எப்படித் தலைவராக நியமிக்கலாம் ? நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் இந்த அராஜக அவலப் போக்கை தடுக்க யாரும் இல்லையா ?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
10-ஜூலை-202119:49:28 IST Report Abuse
spr பொதுவாகவே திரைப்படங்களில் பெண்களை காவற்துறையை இழிவு படுத்துவதே வழக்கமாக இருக்கிறது ஒருதலைக்காமம் என்ற வகையில் தன்னை ஏற்க விரும்பாத ஒரு பெண்ணைத் துரத்தத் துரத்திக் காதலிக்கிற படிப்பறிவில்லாத வெட்டியாக ஊர் வம்புக்கு அலைகிற வேலை செய்து மதிப்புடன் வருமானம் பெற்று குடும்பத்தைக்க காக்க விரும்பாத குடிகாரன் என்பதே கதாநாயகன் அமைப்பு முன்பெல்லாம் இது வில்லனின் குணம் என்று இருந்த நிலை போய் பல முன்னணி நடிகைகளும் இப்படித்தான் காட்டப்படுகிறார்கள் அண்மைக்காலமாக தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வகையில் மத்திய அரசை மட்டம் தட்டும் வசனங்கள் அதிகம் இடம் பெறுவது வழக்கமாகி விட்டது பெயர் மட்டுமே தமிழ் ஆனால் தமிழகப் பண்பாட்டைக் காற்றில் பறக்கவிடும் இப்படங்களை வரி விலக்கு தருவது சரியல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X