திராவிட மாடல் வளர்ச்சி: ஸ்டாலின் விருப்பம்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (85) | |
Advertisement
சென்னை: திராவிட மாடலின் உண்மையான நோக்கத்துடன் தமிழகம் வளர வேண்டும் என்பதே எனது ஆசை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல்வருக்கான ஆலோசனை குழு கூட்டம், கான்பரன்சிங் வாயிலாக நடந்தது.இந்த கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன்,, ஜீன் டிரீஸ், எஸ்.நாராயன், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடலின் உண்மையான நோக்கத்துடன் தமிழகம் வளர வேண்டும் என்பதே எனது ஆசை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல்வருக்கான ஆலோசனை குழு கூட்டம், கான்பரன்சிங் வாயிலாக நடந்தது.இந்த கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன்,, ஜீன் டிரீஸ், எஸ்.நாராயன், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற திராவிட மாடலின் உண்மையான நோக்கத்துடன் தமிழகம் வளர வேண்டும் என்பதே எனது ஆசை . இந்த கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே சாத்தியமாகி விடாது. முழுமையான மற்றும் அதிரடியான மாற்றம் மூலமே சாத்தியம்.
சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்றி, இன உரிமை மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் தான் தி.மு.க., நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன.


latest tamil newsநிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துறைகளின் மூலம் மட்டுமே வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை மத்திய அரசு ஜிஎஸ்டி மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. தமிழகத்தை முன்னுதாரணமாக கொண்டு வருவதற்கு திட்டமிடும் சூழலை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivasakthi - Coimbatore,இந்தியா
10-ஜூலை-202123:26:55 IST Report Abuse
Sivasakthi அதுதான் நிதி நிலை அவ்வளவு மோசமானதாக இருக்கிறதே... இந்த லக்ஷணத்தில் யாராவது அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவசம் வேண்டும் என்று கேட்டார்களா? பத்து இருபது கொடுத்து டிக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலையிலா மக்கள் இருக்கிறார்கள்? அதேபோல் மாதம் ஆயிரம் ருபாய் குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை என்ற திட்டமும். இதை போன்ற தேவை இல்லாத விஷயங்களை விடுத்து தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க திட்டமிட்டால் மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும், அரசுக்கு வரி வருமானமும் வரும். தயவு செய்து இலவசங்களை தேவையுள்ளவர்களுக்கு மட்டும் கொடுங்கள். அனைவரையும் சோம்பேறி ஆக்க வேண்டாம்.
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
10-ஜூலை-202122:06:26 IST Report Abuse
Rajah திராவிடம் என்ற சொல் தமிழ் நாட்டில் இருந்து முற்றாக அகற்றப்படவேண்டும். தமிழ் நாடு என்றும் திராவிட நாடாக முடியாது. திராவிடத்திற்கு கொளகையும் இல்லை சித்தாந்தமும் இல்லை. கேரளா,, கர்நாடக, ஆந்திரா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட மதுபான கலவைதான் திராவிடம். குடித்தால் போதை நன்றாக ஏறும். மூளை மங்கிவிடும். இன்று பிஜேபியும் இதை ஆதரிக்கின்றது.
Rate this:
Cancel
Guru Rajan - coimbatore,இந்தியா
10-ஜூலை-202121:46:31 IST Report Abuse
Guru Rajan கும்பமேளாவுக்கு 2350கோடி (ரெண்டாயிரத்து முன்னு தி ஐம்பது கோடி செல்லவிடவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X