பொது செய்தி

இந்தியா

கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40
கோவிட் பரவல், உலக சுகாதார அமைப்பு, சவுமியா சுவாமிநாதன்

புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை.


உலகளவில் கோவிட் பரவல் இன்னும் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். உலக நாடுகளை 6 மண்டலங்களாக உலக சுகாதார அமைப்பு பிரித்துள்ளது. அதில் 5 மண்டலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்க மண்டலத்தில் கோவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது; 9300 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுவதுதான் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம்; தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடக்காதது; ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தது போன்ற காரணங்களாலும் கோவிட் பாதிப்பு குறையாமல் இருக்கிறது என விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறினார்.

latest tamil news





டெல்டா வகை வைரஸ், மக்கள் கூடுதல், ஊரடங்கில் தளர்வு, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவில்லை. இதனால், பரவல் அதிகரிக்கிறது. முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். அதுவே, டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
10-ஜூலை-202120:55:35 IST Report Abuse
rsudarsan lic Simple. Virus is there so it's spreading. I'm a better scientist than you
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-ஜூலை-202119:18:06 IST Report Abuse
vbs manian நேற்று செய்திகளின் படி தாய்லாந்து இந்தோனேஷியா நாடுகளில் பரவல் அதிகமாக உள்ளது.வெளிநாட்டு சேனல் பார்க்கவும்.
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
10-ஜூலை-202116:14:41 IST Report Abuse
Sekhar Guruswamy டாக்டர் அம்மா, வைரஸ் தாகம் குறையவில்லை என்றால் China, Thailand, Srilanka, Cuba வில் அதிகம் பரவாதது ஏன் ஆய்வு செய்திர்களா? என் கேள்விக்கு என்ன பதில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X