கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்| Dinamalar

கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (9) | |
புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40
கோவிட் பரவல், உலக சுகாதார அமைப்பு, சவுமியா சுவாமிநாதன்

புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை.


latest tamil news




டெல்டா வகை வைரஸ், மக்கள் கூடுதல், ஊரடங்கில் தளர்வு, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவில்லை. இதனால், பரவல் அதிகரிக்கிறது. முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். அதுவே, டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X