இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | |
Advertisement
ஜகர்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது.அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் 68 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும்

ஜகர்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் 68 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன; சில பகுதிகளில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



சுலவேசியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X