சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி பணத்தில் சொத்து குவிப்பு: பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி

Added : ஜூலை 10, 2021
Share
Advertisement
சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள், அந்த பணத்தில், சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் ரேஷ்மா தாவூத்,35. இவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள். இவரும், வளசரவாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, 37;

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள், அந்த பணத்தில், சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் ரேஷ்மா தாவூத்,35. இவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள். இவரும், வளசரவாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, 37; இவரது கணவர், அருண் சாய்ஜி, 36 ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாக, 150க்கும் மேற்பட்டோரிடம், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், இவர்களின் வீடு மற்றும் அலுவலங்களுக்கு அழைத்துச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலி பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், குற்றத்திற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.கிடுக்கிப்பிடி விசாரணையில், இவர்கள் மோசடி செய்த ரூபாயில், கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரியவந்தது. கார் மற்றும் சொத்து ஆவணங்களையும், போலீசார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X