பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியுடன் கவர்னர் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித், டில்லி யில் நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் தாக்கம், தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கவுள்ள மாற்றங்களில் எதிரொலிக்கும் என தெரிகிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் இரவு டில்லி வந்தார்.
Governor,ஆளுநர்,கவர்னர், narendra modi, PmModi,

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித், டில்லி யில் நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் தாக்கம், தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கவுள்ள மாற்றங்களில் எதிரொலிக்கும் என தெரிகிறது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் இரவு டில்லி வந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், நேற்று காலை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.இதன்பின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியபோது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரது விடுதலை மற்றும் 'நீட்' தேர்வு ஆகிய விவகாரங்கள் குறித்தும், கிடப்பில் இருக்கும் சில கோப்புகள் குறித்த விபரங்களையும், ஜனாதிபதியிடம் தமிழக கவர்னர் விளக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏழு பேர் விடுதலைசிறிது ஓய்வுக்கு பின், மாலை, 4:00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, அவரது லோக் கல்யாண் சாலையில் உள்ள இல்லத்தில், தமிழக கவர்னர் சந்தித்து பேசினார்.


latest tamil news




latest tamil news



20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த நவம்பரில் டில்லிக்கு வந்திருந்த தமிழக கவர்னர், அப்போது பிரதமரை சந்தித்து பேசினார். அதன்பின் இப்போது தான் சந்தித்து உள்ளார்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், முதன்முறையாக நடக்கும் சந்திப்பு இது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி, பிரதமரிடம் விளக்கப்பட்டது; இது நிர்வாக ரீதியான விஷயம். அதேபோல, அரசியல் ரீதியாகவும் சில முக்கியமான விஷயங்கள் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டன.ஏழு பேர் விடுதலை குறித்தும், அதில் தமிழக அரசின் தற்போதைய நிலை குறித்தும், அதில் உள்ள சிக்கல் குறித்தும் விரிவாகவே பேசப்பட்டது.நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சட்டப்பூர்வமான நிலைகள் குறித்தும் கவர்னர் விளக்கினார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், ஒன்றிய அரசு மற்றும் ஜெய்ஹிந்த் விவகாரங்கள் ஆகியவை பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியிடம் கவர்னர் எடுத்துரைத்தார்.அரசியல் மாற்றங்கள்இந்த சந்திப்பின் தாக்கத்தை, தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்படவுள்ள அதிரடியான அரசியல் மாற்றங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்நாடு இல்லத்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் முருகன், தமிழக கவர்னரை சந்தித்து பேசினார்.மரியாதை நிமித்தமான சந்திப்பில், புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக, கவர்னரிடம், முருகன் வாழ்த்துகளை பெற்றார். பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவையும், முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
10-ஜூலை-202122:21:40 IST Report Abuse
s t rajan ஜெய்ஹிந்த் என்று கூட உரக்க சொல்ல முடியாதவரை மாற்றுங்கள்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
10-ஜூலை-202121:11:50 IST Report Abuse
Indhuindian கொளுத்தி போட்டுட்டு வாங்க ...கவுன்சிலர்களாம் அல்லாடட்டும்
Rate this:
Cancel
L. R. Sethuraman - Chennai,இந்தியா
10-ஜூலை-202120:43:41 IST Report Abuse
L. R. Sethuraman தனது சட்ட மன்ற தொடக்க உரையில் அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விவரங்களை வாசித்தபின், ஒரு இந்திய குடிமகன் என்ற முறையிலும், இம்மாநிலத்தின் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை நிலைநாட்டும் தலையாய குடிமகன் என்ற முறையிலும் தன்னுடைய உரையை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையில் முடித்து அரசுக்கு உரிய அறிவுரையை வழங்கி விட்டு தன் இருக்கையில் இவர் அமர்ந்திருந்தால் பாராட்டுக்குரியவராக தன்னை மக்களின் பார்வையில் உயர்த்திக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டு தான் ஒரு கைப்பாவை என்று நிரூபணம் செய்தாரோ அன்றே இவர் ஆளுநர் பொறுப்பிற்குத் தகுதியற்றவர் என்ற கரும்புள்ளி இவர் மீது விழுந்தாயிற்று. இவர் முழுவதுமாக ஓய்வு பெற நடக்கும் காட்சிகளின் தொடக்கமே இன்றைய சந்திப்பு என்பது இன்னும் சில தினங்களில் மக்களுக்குத் தெரியவருவது திண்ணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X