இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ‛பறக்கும் பாவை': அந்தரத்தில் பிடித்த கேட்ச் வைரல்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டுவென்டி - 20 போட்டியில், இந்தியாவின் ஹர்லீன் தியோல்,அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் உலகளவில், சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இங்கிலாந்து சென்றுள்ள, இந்திய பெண்கள் அணி, அந்நாட்டிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட
harleenDeol, imharleenDeol, england, india,

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டுவென்டி - 20 போட்டியில், இந்தியாவின் ஹர்லீன் தியோல்,அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் உலகளவில், சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து சென்றுள்ள, இந்திய பெண்கள் அணி, அந்நாட்டிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி- 20 போட்டியில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி நார்தாம்டனில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.


latest tamil news



இப்போட்டியில் இந்தியாவின் ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை இங்கிலாந்தின் அமி ஜோன்ஸ் 'சிக்சருக்கு' அனுப்ப முயற்சித்தார். அப்போது 'பவுண்டரி' பகுதியில் 'பீல்டிங்' செய்த இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் அந்தரத்தில் பறந்து 'கேட்ச்' செய்தார். 'பேலன்ஸ்' செய்ய முடியாத இவர், 'பவுண்டரிக்கு' வெளியே செல்வதற்கு முன் சாமர்த்தியமாக பந்தை மேலே துாக்கி எறிந்தார். உடனடியாக மைதானத்திற்குள் 'டைவ்' அடித்து பந்தை மீண்டும் 'கேட்ச்' செய்து அசத்தினார்.

இருப்பினும், இந்த, போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு 8.4 ஓவரில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், ஹர்லீன் தியோல் பிடித்த கேட்ச் அனைவரின் பாராட்டுகளை பெற்றது. இது குறித்தே அனைவரும் பேச துவங்கினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் உலகளவில் இந்த கேட்ச் வைரலானது. ஹர்லீன் தியோல் பெயரும் டிரெண்டிங்கில் வந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் ஹர்லீன் தியோலை பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-202100:26:01 IST Report Abuse
Sankar Ramu கனவிலே மட்டும் முடியும் இப்படி ஒரு கேட்ச். அபூர்வம் வாழ்த்துக்கள் பறக்கும் பெண்னே
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-ஜூலை-202123:27:55 IST Report Abuse
Vena Suna அவருக்கு 2000 ரூபாய் பரிசு கொடுக்க வேண்டும்..
Rate this:
Cancel
ganapathy -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூலை-202122:15:04 IST Report Abuse
ganapathy what an excellent catch. congrats
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X