காங்., கட்சியில் நிர்வாக மாற்றம் சச்சின் பைலட்டுக்கு முக்கிய பதவி?

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி:கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்ய, கட்சிதலைமை முடிவு செய்து உள்ளது. சச்சின் பைலட், கார்கே உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி, படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று, அப்போதைய காங்., தலைவர் ராகுல் பதவி விலகினார்.
 காங்., கட்சி, நிர்வாக மாற்றம் ,சச்சின் பைலட், முக்கிய பதவி?

புதுடில்லி:கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்ய, கட்சிதலைமை முடிவு செய்து உள்ளது. சச்சின் பைலட், கார்கே உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி, படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று, அப்போதைய காங்., தலைவர் ராகுல் பதவி விலகினார். தற்காலிக தலைவராக சோனியா மீண்டும் பொறுப்பேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், காங்., தோல்விகளை சந்தித்தது.

இதற்கிடையே காங்., ஆளும் மாநிலங்களில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டிற்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தும் வகையில், நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதற்குள், இந்த அதிரடி மாற்றங்களை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மாநில காங்., தலைவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.

சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் தற்போதைய பதவிகளில் நீடிப்பர் எனக் கூறப்படுகிறது. மூத்த தலைவர்களான சச்சின் பைலட், மல்லிகார்ஜுன கார்கே, டி.எஸ்.சிங் தியோ உள்ளிட்டோரை, தேசிய அரசியலுக்குள் நுழைத்து கட்சியை வழிநடத்தும் வகையில் அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.கட்சி தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த 23 தலைவர்களும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துஉள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
11-ஜூலை-202117:19:35 IST Report Abuse
r.sundaram இவர்களுக்கு பதவி கொடுத்து பயன் என்ன? தலைமைப்பதவியும், கஜானாவும் அந்த குடும்பத்திடம் தானே இருக்கப்போகிறது? அப்புறம் எங்கே மாறுதல்?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-202116:53:45 IST Report Abuse
J.V. Iyer கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம். காங்கிரஸ் வாலை நிமிர்த்தமுடியுமா?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-202114:31:44 IST Report Abuse
vpurushothaman பைலட் வந்த பின்னராவது காங்கிரஸ் வண்டி வேகமெடுக்குதா பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X