'நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள்: விசாரிக்க தனிப்பிரிவு அமையுங்க'

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை:'தமிழகத்தில், வங்கி சாரா நிதி நிறுவனங்களால், வாகன உரிமையாளர்கள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்பான புகார்களை விசாரிக்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்' என, முதல்வருக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஆகஸ்ட் இறுதி வரை, கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க, அனைத்து வங்கிகள் மற்றும்
'நிதி நிறுவனங்கள்,  புகார்கள்,விசாரிக்க,தனிப்பிரிவு,அமையுங்க, பன்னீர்செல்வம்'

சென்னை:'தமிழகத்தில், வங்கி சாரா நிதி நிறுவனங்களால், வாகன உரிமையாளர்கள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்பான புகார்களை விசாரிக்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்' என, முதல்வருக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஆகஸ்ட் இறுதி வரை, கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.எனினும், ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள், கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. முதல் அலையின் போது, போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.

தற்போது, புகார் வாங்கக் கூட மறுக்கின்றனர். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக, காவல் துறையினருடன் கை கோர்த்துள்ளனர்.மேலும், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம், 15 லட்சம் ரூபாய் என அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுகிறது. சில நேர்வுகளில் தவணையை செலுத்தினாலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தை தர, நிதி நிறுவனம் மறுப்பதாக தகவல் வருகிறது.

ஏலத்தில் விடப்படும் வாகனங்களுக்கான, குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது, மிகவும் அவசியம் என, வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.கடன் வசூலில், ரிசர்வ் வங்கி அனுமதியை மீறி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவல் துறையினருடன் சேர்ந்து, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க, தமிழகம் முழுதும் தனிப்பிரிவு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
11-ஜூலை-202123:24:41 IST Report Abuse
Mohan அவிங்க ஏற்கனவே குழு குழுவா வச்சி விரயம் பண்ணுறாங்க, நீங்க பிரிவு பிரிவா வைக்க சொல்லுறீங்க. என்ன குழுவோ எழவோ போங்க.
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
11-ஜூலை-202121:29:36 IST Report Abuse
Nesan இதை யார் சொல்லுறதுனு ஒரு விவஸ்த்தை இல்லையா?.
Rate this:
Cancel
11-ஜூலை-202118:41:21 IST Report Abuse
அப்புசாமி பொறுங்க சார்... நிதிநிறுவன மோசடி, குடிமராமத்து , எட்டுவழிச்சாலை, எய்ம்ஸ் நு விசாரிக்க ஏகப்பட்ட தனித்துறைகள் தேவைப்படும். உங்க ஆட்சியைப் பத்தின ஊழல் பட்டியலே கெவுனர் கிட்டே குடுத்திருக்காரு. எல்லாத்துக்கும் தனித்தனியே விசாரிப்பாரு. ஆனா அச்சம் வேண்டாம். எதையும் நிரூபிக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X