இரண்டுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகை 'கட்': மக்கள் தொகையை குறைக்க உ.பி.,யில் புதிய சட்டம்

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லக்னோ: மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். தேர்தலில் போட்டியிட முடியாது' என, வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு பல

லக்னோ: மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். தேர்தலில் போட்டியிட முடியாது' என, வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நாட்டிலேயே பரப்பளவில், நான்காவது பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.


புதிய மசோதா

இந்நிலையில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்ட சபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், மாநில அரசு, புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து, 19ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அரசு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த மசோதா சட்டமான பின், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தை உள்ளோருக்கு, அரசின் அனைத்து நலத் திட்ட பலன்களும் ரத்து செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது. குறிப்பிட்ட குடும்பத்தில் நான்கு பேருக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அரசின் எந்த மானியமும் வழங்கப்படாது.


பல சலுகைகள்

அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு, கணவன் அல்லது மனைவி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தால், பல புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வட்டியில்லா கடன்; குடிநீர், மின்சாரம், வீட்டு வரிகளில் தள்ளுபடி வழங்கப்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, வழக்கமான ஆண்டு சம்பள உயர்வுடன், இரண்டு சம்பள உயர்வு கூடுதலாக வழங்கப்படும். மேலும், முழு சம்பளத்துடன் 12 மாத பிரசவ கால விடுமுறை வழங்கப்படும். அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவிக்கு இலவச மருத்துவ சிகிச்சையுடன், காப்பீடு திட்டமும் வழங்கப்படும்.

ஒரு குழந்தை மட்டுமே உள்ள, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த குடும்பத்துக்கு, மேலும் பல சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. அந்தக் குழந்தைக்கு, 20 வயது வரை இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் காப்பீடு வழங்கப்படும். ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை மையம், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.

இளநிலை பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்படும். உயர் படிப்புக்கு கல்வி நிதி உதவி வழங்கப்படும். அரசு வேலைகளில் முன்னுரிமை தரப்படும்.ஒரு குழந்தை மட்டுமே உள்ள, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோருக்கு, ஒருமுறை ஊக்கத் தொகையாக, ஆண் குழந்தையாக இருந்தால் 80 ஆயிரம் ரூபாயும், பெண் குழந்தையாக இருந்தால், 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.இவ்வாறு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து மக்கள் கருத்து தெரிவித்த பின், திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் மக்களின் கருத்து கேட்கப்பட உள்ளது. சட்டசபையில் நிறைவேறி, கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே,இது அமலுக்கு வரவுள்ளது.


கட்சிகள் எதிர்ப்பு!

உத்தர பிரதேச அரசின் புதிய மசோதாவுக்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளதாக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. விவாகரத்து பெற்றோர், விதவையர் போன்றவர்கள் குறித்து மசோதாவில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இது குறித்து சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
13-ஜூலை-202118:02:00 IST Report Abuse
K.P  SARATHI இந்துக்கள் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்திவிட்டார்கள் . ஆனால் இஸ்லாம், குறைந்தது நான்குக்கு மேலே பெற்றுக்கொள்கின்றனர். நம் அரசிசியல்வாதிகள் ஒரு காரணம்
Rate this:
Cancel
Sourirajan Raghuraman - BENGALURU ,இந்தியா
11-ஜூலை-202118:57:35 IST Report Abuse
Sourirajan Raghuraman துணிச்சலான முயற்சி. தேவையான சட்டம். அனைத்து மாநிலங்களிலும் வரவேண்டும். ஜாதியையும் மதத்தையும் இணைத்து கேவலமான அரசியல்வாதிகள் ஓலமிட்டு ஒப்பாரி வைப்பார்கள். மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு இத்தகைய சட்டமே காரணம்.
Rate this:
Cancel
11-ஜூலை-202118:32:19 IST Report Abuse
அப்புசாமி இனிமே மரம் வெச்சவன் தண்ணீர் ஊத்துவான்னெல்லாம் டயலாக் பேச முடியாது. மரம் வெச்சவனுக்கே ஆப்பு வெக்கறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X