மலைக்க வைக்கும் மக்கள் தொகை இன்று உலக மக்கள் தொகை தினம்

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உலகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு
மலைக்க வைக்கும் மக்கள் தொகை  இன்று உலக மக்கள் தொகை தினம்

உலகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


770 கோடி:


உலகின் தற்போதைய மக்கள் தொகை 770 கோடியை தாண்டி விட்டது. இப்படியே போனால் 2030ல் 850 கோடி, 2050ல் 970 கோடியாக மாறும். அதிகமக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. இந்தியா மக்கள் தொகை 135 கோடி உள்ள நிலையில் தமிழக மக்கள் தொகை எட்டு கோடியை தாண்டிவிட்டது. உலக மக்கள் தொகையில் 2வது இடம். முதல் இடத்தில் சீனா உள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.


சுகாதாரம்:

ஐ.நா., சபை அறிக்கையின் படி, உலகில் ஒரு நாளைக்கு 800 பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என மதிப்பிட்டுள்ளது. இதற்கு சுகாதார வசதி குறைவும் ஒரு காரணம். உயிரிழப்பு இல்லாத பிரசவம் நடப்பதற்கு, உரிய சுகாதார வசதிகளை ஒவ்வொரு அரசும் ஏற்படுத்த வேண்டும்.


என்னென்ன பாதிப்புகள்:

மக்கள் தொகை அதிகரிப்பதால் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரம், உணவு, கல்வி, போக்குவரத்து, இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு குடும்பக்கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகை பற்றிய கல்வி, பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-ஜூலை-202122:04:24 IST Report Abuse
THINAKAREN KARAMANI மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள்தொகை பற்றிய கல்வியை பள்ளி பாட நூல்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்த்த மக்கள் தொகை அதிகரிப்பதால் சிரமம் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-202107:48:38 IST Report Abuse
Lion Drsekar ஒழுங்காக நேர்மையாக கணக்கெடுத்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும், இதற்க்கேனே தனி துறையையை வைத்து அதிலும் பல லட்சம் கோடி செலவு செய்கிறார்கள் இதற்க்கு பதிலாக தபால் துறையினர்களின் கைகளில் இந்த துறையும் ஒப்படைத்தால் மிக மிக தெள்ளத்தெளிவாக உண்மையான தகவல்களைக் கொடுப்பார்கள், எந்த துறையும் விலைக்கு வாங்கலாம் ஆனால் தபால் துறையில் இருக்கும் நேர்மை அளவிடமுடியாதது மேலும் இவர்கள் மக்களோடு நெருங்கி பழகும் தொடர்பில் இருப்பதால் ஒவ்வொரு வீட்டுக்கும் உரிமையுடன் சென்று நேர்மையாக செயல்படமுடியும், இதே சென்சஸ் துறைக்கு அனுப்பப்படும் அரசு ஊழியர்கள் பொதுவாக ஆசிரிய பெருமக்கள் அவர்கள் ஒரு சில இடங்களில் செல்ல பயப்படும் நிலை இருக்கிறது . இரண்டு கால்கள் இரண்டு கைகள் இருக்கும் மனிதர்கள்தான் ஆனால் அங்கு செல்ல எல்லா அரசு ஊழியர்களுக்கு ஒரு அச்ச உணர்வு வேறொன்றிப்போனது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-ஜூலை-202106:31:39 IST Report Abuse
Loganathan Kuttuva இந்திரா பிரதமராக இருந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது .கர்நாடகாவில் எடியூரப்பா ,மஹாராஷ்டிராவில் பாத்னாவிஸ் குடும்ப கட்டுபாட்டிற்காக முயற்சிகள் செய்தனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X