அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேயர் வேட்பாளர் மகேந்திரனா? கொந்தளிக்கும் கோவை தி.மு.க.,

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட முறையில் மகேந்திரனுக்கு கோவை மாவட்டத்தில் செல்வாக்கு உண்டு. தி.மு.க.,வில்இணைந்த போது, 'எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியும்' என மகேந்திரன் கூறினார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.



latest tamil news


தனிப்பட்ட முறையில் மகேந்திரனுக்கு கோவை மாவட்டத்தில் செல்வாக்கு உண்டு. தி.மு.க.,வில்இணைந்த போது, 'எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியும்' என மகேந்திரன் கூறினார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின், 'சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மாவட்டங்களில், நாம் வெற்றி பெற முடியாததை எண்ணி வருத்தப்படுகிறேன். மகேந்திரன் அப்போதே வந்து சேர்ந்திருந்தால் அந்த கவலையும், இப்போது இல்லாமல் போயிருக்கும்' என்றார். இது, கட்சியினரிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக பொங்குகின்றனர். அவர்கள் கூறியதாவது:கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்தி. அவர் தான் சிங்காநல்லுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர். அவர் தோற்க வேண்டும் என்பதற்காகவே மகேந்திரன் பல வேலைகளை தேர்தல் நேரத்தில் பார்த்தார். அவர் பெற்ற ஓட்டுகளால் தான், தி.மு.க., இந்த முறை தோல்வி அடைந்தது. தி.மு.க., தோல்வியடைய காரணமாக இருந்தவரை, கட்சிக்குள் கொண்டு வந்து புகழ்வது, கட்சிக்காக உண்மையாக பாடுபட்ட தி.மு.க., தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

கார்த்திக் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார். அதனால் தான், அவர் தன் தொகுதியைச் சேர்ந்த முக்கியமானவர், மாற்று கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மகேந்திரன், பண பலம் படைத்த தொழில் அதிபர். அதனாலேயே, மக்கள் நீதி மய்யத்திலும், அவருக்கு வரவேற்பு இருந்தது. அதே பாணியில் தி.மு.க.,விலும் பணியாற்ற வந்திருக்கிறார்.


latest tamil news


கட்சித் தலைமை அவரை, கோவை மேயர் வேட்பாளராக நிறுத்த உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இப்படி மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தான், கட்சியில் முக்கியத்துவம் என்றால், நாங்கள் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்ன பிரயோஜனம்?தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான். சொந்த கட்சியினருக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. இதைத் தான், மகேந்திரனை புகழ்ந்து பேசி, கட்சியினருக்கு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இவ்வாறு அவர்கள் புலம்பினர்.
- நமது நிருபர் - -

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SVKSIMHAN - COIMBATORE,இந்தியா
15-ஜூலை-202117:15:45 IST Report Abuse
SVKSIMHAN பண முதலைகளுக்கும், ஆள் பலத்தின் அதிகார போக்கனுக்கு உண்டான தகுதியே அரசியலுக்கு என்ற காலம் கர்மவீரருக்கு பின்பிருந்தே ஆரம்பித்தாகிவிட்டது. யோசிக்காமல் அப்பாவிகள் நிறைந்த மக்கள் கரை வெட்டிகளுக்கு கோஷமிடுவதே சாமானியனின் மூடத்தனம்.நாட்டை ஆளுமை புரிவதற்கான கல்வியறிவு கேள்விக்குறி.ஆக நாட்டின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியே. ,
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
14-ஜூலை-202120:52:10 IST Report Abuse
bal பதவி வேணும்னா என்ன வேணா செய்வாங்க...மேயர் பதவிக்கு வந்து பணம் சுருட்டனும்...மக்களுக்கு நல்லதல்ல.என்ன அவங்க திமுகவுக்கு வோட்டு போடலை.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
14-ஜூலை-202106:02:43 IST Report Abuse
Sathish கார்த்திக்கின் செயல்பாடு பிடிக்காமல் தான் ஜெயராமிற்கு வாக்களித்துள்ளார்கள் சிங்காநல்லூர் தொகுதி மக்கள். கட்சி மாறிய மகேந்திரனை மீண்டும் ஆதரிப்பது கடினம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X