ரூ.3,500 கோடி தொழில் முதலீடு; கோட்டை விட்டது தமிழகம்

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021 | கருத்துகள் (78) | |
Advertisement
கேரள அரசின் தொழில் விரோத நடவடிக்கைகளால் நொந்து போன, 'கிடெக்ஸ்' குழுமம், அங்கே செய்யவிருந்த 3,500 கோடி ரூபாய் முதலீட்டை தள்ளி வைத்தது.அந்த வாய்ப்பை தற்போது, தெலுங்கானா மாநிலம் தட்டிச் சென்றுள்ளது.அழைப்பு கடிதம்'கேரள மாநிலத்தை விட்டு வெளியேறுகிறேன்' என்று, கிடெக்ஸ் குழும தலைவர் சாபு எம்.ஜேக்கப் தெரிவித்தவுடனே, தமிழகம் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும்

கேரள அரசின் தொழில் விரோத நடவடிக்கைகளால் நொந்து போன, 'கிடெக்ஸ்' குழுமம், அங்கே செய்யவிருந்த 3,500 கோடி ரூபாய் முதலீட்டை தள்ளி வைத்தது.latest tamil news


அந்த வாய்ப்பை தற்போது, தெலுங்கானா மாநிலம் தட்டிச் சென்றுள்ளது.அழைப்பு கடிதம்'கேரள மாநிலத்தை விட்டு வெளியேறுகிறேன்' என்று, கிடெக்ஸ் குழும தலைவர் சாபு எம்.ஜேக்கப் தெரிவித்தவுடனே, தமிழகம் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் வழங்குவதாக உத்தரவாதம் அளித்து, அழைப்பு கடிதம் அனுப்பியது.இதை சாபு ஜேக்கப்பே, பத்திரிகை செய்தி வாயிலாக தெரிவித்தார்.ஆனால், முதலீட்டை பெறுவதில் முந்திக் கொண்டது, தெலுங்கானா மாநிலம்.அம்மாநில தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், கிடெக்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவினரோடு, இரண்டு சுற்று பேச்சு நடத்தி, வாய்ப்பை தட்டிச் சென்று விட்டார்.

கிடெக்ஸைச் சேர்ந்த ஐந்து பேர் குழுவோடு, நேற்று முன்தினம் ராமா ராவ் நேரடி சந்திப்பை மேற்கொண்டார்.தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு தொழில் ஆதரவு கொள்கைகளை விளக்கியதுடன், அம்மாநிலத்தில் கிடைக்கும் தரமான பருத்தியை பற்றியும் விளக்கினார். அதன் தொடர்ச்சியாக, அன்று மதியமே தனி ஹெலிகாப்டரில், கிடெக்ஸின் ஐவர் குழுவை, தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்துக்கு ராமா ராவ் வரவழைத்தார்.அங்கே, 1,200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஜவுளி பூங்காவை, மாநில தொழில் துறை உள்கட்டமைப்பு கழக துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான இ.வி.நரசிம்ம ரெட்டி சுற்றிக்காட்டி, வசதிகளை விளக்கினார்.


latest tamil news


தெலுங்கானாவின் பட்டுக் கம்பள வரவேற்பில் திருப்தி அடைந்த சாபு எம்.ஜேக்கப், வாரங்கலில் உள்ள ஜவுளி பூங்காவிலேயே, தம்முடைய கிடெக்ஸ் குழுமத்தின் ஆயத்த ஆடை யூனிட் ஒன்றை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தார். வேலைவாய்ப்புஅடுத்த இரண்டு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாயில் உருவாக விருக்கும் இந்த யூனிட், தெலுங்கானாவில் உள்ள 4,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில், இந்த முதலீடு மேலும் அதிகரிக்கும். கேரள மாநிலத்தில், 3,500 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டு இருந்தது, கிடெக்ஸ் குழுமம்.தமிழகம் தவறவிட்ட வாய்ப்பு, தெலுங்கானாவுக்கு சென்று விட்டது.

- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
12-ஜூலை-202110:38:52 IST Report Abuse
pattikkaattaan தமிழ்நாட்டில் பருத்தி விளைவது மிகவும் அரிதாகிவிட்டது ... தெலுங்கானா வாரங்கல் பகுதியில் அபரிதமான பருத்தி உற்பத்தி உள்ளது.. முதலீடு செய்பவர் தனக்கு எங்கு மூலப்பொருள் கிடைக்கும் என்பதை உறுதிசெய்து அங்கு தொழில் தொடங்குவது இயல்புதானே.. திருப்பூரில் வீதிக்கு வீதி "ஆட்கள் தேவை" என்று விளம்பரம் உள்ளது.. பெருந்துறை பகுதியிலும் நிறைய ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.. ஆனால் ஒரு வேதனையான விஷயம், சாயக்கழிவுகள் மண்ணை மாசுபடுத்துவது மட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ள கிணற்று நீரையும் மாசுபடுத்திவிட்டது.. நேற்று கோவையில் சாயக்கழிவுகள் எவ்வாறு நொய்யல் ஆற்று நீரை மாசுபடுத்துகின்றது என்று தினமலரில் படித்தேன் .. அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் ஏன் ஆயத்த ஆடைகள் தயாரிக்காமல், ஆசிய நாடுகளில் உற்பத்தி செய்து வாங்குகிறார்கள் என்று சற்று யோசியுங்கள் .. அவன் இயற்கையை மாசுபடுத்த அனுமதிப்பதில்லை.. நமக்கு காசு வந்தால் போதுமென்று, சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம்.. இதனால் பாதிக்கப்படுவது நம் எதிர்கால சந்ததியினர் என்பதை சிந்தித்து பார்ப்பதில்லை.. இயற்கையை காப்போம்.. நம் நாட்டை காப்போம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஜூலை-202105:40:23 IST Report Abuse
meenakshisundaram 'பதின்மூன்று பெர்ஸன்ட் ' கேட்டிருப்பாங்க
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஜூலை-202119:48:08 IST Report Abuse
Krishnamurthy Venkatesan Vimalathithan - Abu Halifa,குவைத்- தாங்கள் மிக அற்புதமாக பதிவிட்டுளீர்கள். ஆனால் இங்குள்ளவர்கள் (பிஜேபி) இதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. என்ன இருந்தாலும் பேச்சு திறமையில் திராவிட கட்சிகளை வெல்ல முடியுமா? ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம், நீட் தேர்வை ஒழிப்போம் என சொன்னார்கள். ஆனால் இப்போது கை விரித்து விட்டார்கள். தமிழகத்தில் அடாவடி அரசியல் தான் ஈடுபடும். சாத்வீக முறை அரசியல் அல்ல. இதற்கு காரணம் பிஜேபி க்கு வலிமையான SPOKES PERSON இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X