கோபா கோப்பை வென்றது அர்ஜென்டினா முதல் 'சாம்பியன்' மெஸ்சி

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
ரியோ டி ஜெனிரோ: சர்வதேச அரங்கில் 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோப்பை வென்றது அர்ஜெர்ன்டினா. கோபா அமெரிக்க தொடர் பைனலில் 1-0 என பிரேசிலை வீழ்த்தியது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்தது. ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் பைனல் நடந்தது. உலகத் தரவரிசையில் 3 வது இடத்திலுள்ள நெய்மரின்

ரியோ டி ஜெனிரோ: சர்வதேச அரங்கில் 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோப்பை வென்றது அர்ஜெர்ன்டினா. கோபா அமெரிக்க தொடர் பைனலில் 1-0 என பிரேசிலை வீழ்த்தியது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்தது.



latest tamil news


ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் பைனல் நடந்தது. உலகத் தரவரிசையில் 3 வது இடத்திலுள்ள நெய்மரின் பிரேசில் அணி, 8 வது இடத்திலுள்ள மெஸ்சியின் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.

போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் ஓட்டமெண்டியை 'பவுல்' செய்த பிரேசில் வீரர் பிரெட்டுக்கு 'எல்லோ கார்டு' கிடைத்தது. கடந்த காலிறுதி, அரையிறுதியில் இரண்டாவது பாதியில் 67, 71 வது நிமிடங்களில் மாற்று வீரராக களமிறங்கிய முன்னணி வீரர் ஏஞ்சல் டி மரியாவை, இம்முறை அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி, போட்டியின் துவக்கத்திலேயே களமிறக்கினார்.


சூப்பர் கோல்


இதற்கு நல்ல பலன் கிடைத்தது. போட்டியின் 22 வது நிமிடம் டி பால் நீண்ட துாரத்தில் இருந்து கொடுத்த பந்தை பெற்ற மரியா, கோல் கீப்பர் எடர்சன், தலைக்கு மேலாக பந்தை இடது காலால் உதைக்க, சூப்பர் கோலாக மாறியது. அர்ஜென்டினா அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.


latest tamil news


இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா கோல் கணக்கை சமன் செய்ய நெய்மர் உள்ளிட்ட பிரேசில் வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் ஆனது.


'முதல்' கோப்பை


கால்பந்து 'ஜாம்பவான்' அர்ஜென்டினாவின் மெஸ்சி, 2005 முதல் சர்வதேச அரங்கில் ஒரு கோப்பை கூட வென்று தந்தது இல்லை. 2014 உலக கோப்பை, 2007, 2015, 2016 கோபா தொடரின் பைனலில் தோல்வி தான் கிடைத்தது. தற்போது இவரது தலைமையிலான அணி, அர்ஜென்டினா அணிக்காக முதல் கோப்பை கைப்பற்றி அசத்தியது. இத்தொடரில் 4 கோல் அடித்த மெஸ்சி, சக வீரர்கள் 5 கோல் அடிக்க உதவினார். இவருக்கு தொடர் நாயகன், தொடரின் சிறந்த வீரர் விருது கிடைத்தது. ஏஞ்சல் டி மரியா, ஆட்ட நாயகன் ஆனார்.



1993 க்குப் பின்...


அர்ஜென்டினா அணி கடைசியாக 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றிருந்தது. இதன் பின் உலக கோப்பை உட்பட சர்வதேச தொடர்களில் எவ்வித கோப்பையும் வெல்லவில்லை. தற்போது 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோபா கோப்பை வென்று அசத்தியது.
கோபா அமெரிக்க தொடரில் 15 வது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டினா. இத்தொடரில் அதிக கோப்பை வென்ற உருகுவேயின் (15) சாதனையை சமன் செய்தது. அடுத்த இடத்தில் பிரேசில் (9 முறை) உள்ளது. பராகுவே, சிலி, பெரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
11-ஜூலை-202108:49:24 IST Report Abuse
G.BABU தென் அமெரிக்கா நாடுகளில் , பிரேசில் ,அர்ஜென்டினா இரண்டுமே பலம் பொருந்திய தகுதி உடைய அணிகள்தான்...... இன்று இங்கிலாந்து எதிர் இத்தாலியின் யூரோ கிண்ண பலப்பரீட்சையை பாப்போம். மிக விறு விறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் இந்த போட்டி அமையும் என்பதில் சந்தேகமில்லை......அரை நூற்றாண்டுகளுக்கு பின்பு கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து , அதே போல் இந்த தொடரில் தோல்வியே அடையாத இங்கிலாந்தும் ,இத்தாலியும் இன்று சந்திக்க போகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X