மோடிக்கு நெருக்கமான புதிய அமைச்சர்கள்

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: புதிய அமைச்சர்களில் இரண்டு பேர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள். இதில் ஒருவர் தற்போது சுகாதாரத் துறை அமைச்சராகியுள்ள மன்சுக் மாண்டவியா. இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இணை அமைச்சராக இருந்த இவரை கேபினட் அமைச்சராக்கி பதவி உயர்வு கொடுத்துள்ளார் பிரதமர். ஆரவாரம் இல்லாமல் வேலை செய்பவர் இவர். இணை அமைச்சராக இருந்த போது நன்றாக பணியாற்றியுள்ளார். கொடுத்த
modi, new ministers, close, மோடி, நெருக்கம், புதிய அமைச்சர்கள்

புதுடில்லி: புதிய அமைச்சர்களில் இரண்டு பேர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள். இதில் ஒருவர் தற்போது சுகாதாரத் துறை அமைச்சராகியுள்ள மன்சுக் மாண்டவியா. இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இணை அமைச்சராக இருந்த இவரை கேபினட் அமைச்சராக்கி பதவி உயர்வு கொடுத்துள்ளார் பிரதமர். ஆரவாரம் இல்லாமல் வேலை செய்பவர் இவர். இணை அமைச்சராக இருந்த போது நன்றாக பணியாற்றியுள்ளார். கொடுத்த வேலையை சரியாக செய்து முடிப்பவர். டாக்டரான ஹர்ஷவர்த்தனை நீக்கிவிட்டு, இவரை அமைச்சராக்கியுள்ளார் மோடி. இதிலிருந்தே இவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பது தெரியவரும்.


latest tamil news


மற்றொருவர் அஸ்வினி வைஷ்ணவ். இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடன் பணியாற்றியவர்; மிகவும் நேர்மையானவர். தற்போது ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம் என இரண்டு துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவில் கலெக்டராக இருந்த போது ஒரு கூட்டம் முடிந்ததும் எல்லாருக்கும் சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. அங்கிருந்த வயதான பியூனை அழைத்து, 'உங்களுக்கு சிற்றுண்டி கொடுக்கப்பட்டதா' எனக் கேட்டாராம். 'இல்லை' என அந்த பியூன் சொன்னதும் கோபப்பட்ட இவர், 'கடைநிலை ஊழியர் என்றால் அவன் மனிதன் இல்லையா' எனக் கத்தினாராம்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202119:01:49 IST Report Abuse
அப்புசாமி இவுரு ஒரு ஆளுக்கு பதவி குடுத்தா 1000 பேருக்கு குடுத்தா மாதிரி.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-202114:29:22 IST Report Abuse
vpurushothaman குஜராத் என்றாலே மோடிஜிக்கு " நெருக்கம் " இருக்குமே
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202117:32:42 IST Report Abuse
rameshசுகாதார அமைச்சர் சோசியல் மீடியா பாருங்க அவர் ஆங்கிலத்தை பார்த்து அப்படியே புல்லரிச்சி போஇவிங்க எல்லாம் தலை விதி வேற என்ன சொல்ல...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12-ஜூலை-202108:15:49 IST Report Abuse
VENKATASUBRAMANIAN நல்லவர்கள் அதிகாரிகளாக இருந்தால் நாட்டுக்கு நல்லது. ஜால்ரா அடிப்பவர்கள் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு நல்லது. மக்களுக்கு நாமம். இதுதான் தமிழ் நாட்டில் நடக்கிறது. ஒன்று இரண்டு பேர்களை தவிர.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X