அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி!

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சேலம் : கொங்கு மண்டலத்தில் தி.மு.க., தோல்வி குறித்து, சபரீசன் குழுவினர் விசாரித்துள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி மாவட்டங்களில், சொற்ப எண்ணிக்கையிலேயே தி.மு.க., வெற்றி பெற்றது. இச்சரிவை உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சரி செய்ய, அக்கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது.முதல் கட்டமாக,
DMK, CM Stalin, Kongu Nadu

சேலம் : கொங்கு மண்டலத்தில் தி.மு.க., தோல்வி குறித்து, சபரீசன் குழுவினர் விசாரித்துள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி மாவட்டங்களில், சொற்ப எண்ணிக்கையிலேயே தி.மு.க., வெற்றி பெற்றது. இச்சரிவை உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சரி செய்ய, அக்கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது.

முதல் கட்டமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் வளைக்கப்பட்டனர். இவர்கள் மூலமும், செந்தில் பாலாஜி நேரடியாகவும், அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் செயலர்களை தொடர்பு கொண்டு, தி.மு.க.,வில் சேர்க்க முயற்சித்து வருகிறார்.


latest tamil news



இந்நிலையில் தி.மு.க.,வின் தோல்வி குறித்து உண்மை நிலவரத்தை அறிய, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டில், தனியார் நிறுவனம் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இதில் தி.மு.க.,வில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், தோல்விக்கு காரணம், குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து, ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலர்கள் வரை, கடந்த 8, 9, 10ம் தேதிகளில் விசாரித்து முடித்துள்ளனர். அதன் அறிக்கையை, சபரீசனிடம் இன்று வழங்குகின்றனர்.

இதன்படி தேர்தலின்போது, 'உள்ளடி' வேலையில் ஈடுபட்ட நிர்வாகிகளை கழற்றிவிட்டு, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, பதவி வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டல தி.மு.க., நிர்வாகிகள் பீதியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
17-ஜூலை-202110:39:27 IST Report Abuse
Lakshmipathi S ஸ்டாலினுக்கு மகன் மேல நம்பிக்கை இல்லை .அதனால் மருமகன் உதவி தேவைப்படுகிறதா ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஜூலை-202103:42:46 IST Report Abuse
meenakshisundaram இந்த தகவலில் -திமுக வை சேர்ந்த ஒய்வு பெட்ரா அதிகாரிகள் -என்று இருக்கிறது .அவங்க யாரு ?அப்போ முன்னாலேயே அரசில் இருந்து கொண்டே அரசியலில் தீவிரமா இருந்தாங்கன்னு தானே ஆகுது ?இது சரியா?அரசாங்க அதிகாரி இவ்வாறு செய்வது தவறு என்று உள்ளது ,அவுங்களுக்கு இப்போ பென்ஷன் கொடுக்கலாமா?
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
13-ஜூலை-202122:45:44 IST Report Abuse
பெரிய ராசு சோத்துல உப்பு போட்டு தின்கிறவன் கொங்கு தமிழன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X