அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை: எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்ற கேள்வி இருப்பதாகவும், அதற்கு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு கூறுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தன் உடல்நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார்.

சென்னை: எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்ற கேள்வி இருப்பதாகவும், அதற்கு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு கூறுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.



latest tamil news



நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தன் உடல்நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ‛அண்ணாத்த' திரைப்படத்தின் சூட்டிங் பணியில் பிசியாக இருந்தார். 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்த ரஜினி, 'டப்பிங்' பணியை ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news



நான் அரசியலுக்கு வரப்போவதில்லை, வரமுடியவில்லை என சொன்னப்பிறகு என்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. அண்ணாத்த திரைப்பட சூட்டிங் தாமதமானது, அதன்பிறகு தேர்தல் வந்தது, கோவிட் பரவல் இருந்தது. அதற்கு பிறகு, என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக நான் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா?, அதன் பணி என்ன? போன்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு உள்ளன.
அதேபோல, எதிர்காலத்தில நான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா போன்ற கேள்விகளும் இருக்கிறது. இது போன்ற பல விஷயங்களை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202113:42:38 IST Report Abuse
Aanandh இந்த தமிழ்நாடு உருப்பட வேண்டுமென்றால் இந்தாளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். கர்நாடகத்துக்கு வண்டியேற்றி விடணும்.
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202112:14:17 IST Report Abuse
Aanandh உடனடியாக இந்தாளை வெளியேற்றினால் தான் தமிழகம் உருப்படும். அண்ணாத்தே படத்தை அனைத்து தமிழர்களும் பா ர்க்காமல் மாபெரும் தோல்வியை கொடுத்து திருப்பிடித்தால்தான் அடங்குவான். இல்லையென்றால் தமிழ் மக்களெல்லாம் இளிச்சவாயர்கள்தான் என்று இன்னும் கொஞ்சம் அல்வா கொடுப்பான். கதம் கதம்.
Rate this:
Cancel
12-ஜூலை-202111:32:51 IST Report Abuse
தமிழ் இன்னும் யாரிடம்தான் ஆலோசனை கேட்பாரோ தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்துக்கே முடிவெடுக்க முடியாதவர் எப்படி ஆன்மீகத்தில் இருக்கிறாரோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X