பொது செய்தி

தமிழ்நாடு

'ஜகா' படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை கோரும் ஹிந்து தமிழர் கட்சி

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் சிவபெருமானுக்கு முக கவசம் அணிவித்து, ஹிந்து மத நம்பிக்கையை அவமதிக்கும், ஜகா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:'ஜகா' என்ற திரைப்படத்தை விஜயமுருகன் தயாரித்து, இயக்கி உள்ளார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு நாகராஜனின் மகன் கதாநாயகனாக
'ஜகா' படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை கோரும் ஹிந்து தமிழர் கட்சி

சென்னை: 'கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் சிவபெருமானுக்கு முக கவசம் அணிவித்து, ஹிந்து மத நம்பிக்கையை அவமதிக்கும், ஜகா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:'ஜகா' என்ற திரைப்படத்தை விஜயமுருகன் தயாரித்து, இயக்கி உள்ளார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு நாகராஜனின் மகன் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின், 'பர்ஸ்ட்லுக்' போஸ்டரை நடிகை நமீதா வெளியிட்டுள்ளார். படத்தில், கொரோனா தொற்று சமயத்தில் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டு, கடவுள் சிலைகளுக்கு முக கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காட்சிகளையும் கதையாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.


latest tamil news



கடவுள் சிவபெருமான் முக கவசம் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து சுவாசிப்பது போன்ற, 'பர்ஸ்ட் லுக்' படத்தை வெளியிட்டு, உள்நோக்கத்தோடு ஹிந்து மதநம்பிக்கையை அவமதிப்பது கண்டத்துக்குரியது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்து மத கடவுள்களை மட்டுமின்றி, எந்த மத கடவுள்களை அவமதிக்கும் விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு, சினிமா வரையறை திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருப்பதை, இதுபோன்ற சினிமாக்காரர்கள் எதிர்ப்பதற்கான காரணம் இது தான். இந்த திரைப்பட குழுவினர் மீது, போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போஸ்டரை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஜூலை-202104:18:03 IST Report Abuse
meenakshisundaram ஆமா 'ஜகா' இது என்ன வார்த்தை ?பச்சை தமிழ வார்த்தையா ?ஒண்ணுமே புரியலையே
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202105:06:51 IST Report Abuse
Nepolian S தமிழில் ஏது ஹிந்து...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
12-ஜூலை-202121:29:22 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்த விஷயம் அந்த லார்டு பரமசிவனுக்கு தெரியுமோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X