பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஜிகா வைரஸ்: குழந்தை உட்பட மேலும் மூவர் பாதிப்பு

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:இதுவரை 27 மாதிரிகள் இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், 26 மாதிரிகள் நெகட்டிவ் என, வந்துள்ளன. 3வது பகுதியாக நேற்று 8 மாதிரிகள் அனுப்பப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


latest tamil news



கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:
இதுவரை 27 மாதிரிகள் இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், 26 மாதிரிகள் நெகட்டிவ் என, வந்துள்ளன. 3வது பகுதியாக நேற்று 8 மாதிரிகள் அனுப்பப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news



திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் பரிசோதனை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவ மத்திய நிபுணர் குழு அம்மாநிலத்துக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202119:22:20 IST Report Abuse
Rajagopal ஒரு பக்கம் ஜிகா வைரஸ். இன்னொரு பக்கம் லவ் ஜிகாத் வைரஸ். கேரளா நல்லாவே மாட்டிக்கிட்டு திண்டாடுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X