பெட்ரோல் விலை உயர்வதால் சைக்கிளை பயன்படுத்துங்கள்: கர்நாடக பா.ஜ., எம்.பி

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
பெங்களூரு: ‛‛பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்,'' என்று கர்நாடக பா.ஜ., எம்.பி., சித்தேஷ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜ. எம்.பி.யாக இருப்பவர் சித்தேஷ்வர். இவர் தாவணகெரேவுக்கு வந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: சர்வதேச
BJP_MP, PetrolPriceHike, Bicycle, Siddeshwara, பாஜக, எம்பி, பெட்ரோல், விலை உயர்வு, சைக்கிள்

பெங்களூரு: ‛‛பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்,'' என்று கர்நாடக பா.ஜ., எம்.பி., சித்தேஷ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜ. எம்.பி.யாக இருப்பவர் சித்தேஷ்வர். இவர் தாவணகெரேவுக்கு வந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும்.


latest tamil news



பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது, சிக்கனமாது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மை தாக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202109:26:23 IST Report Abuse
அருணா மேற்கு வங்கம் போல் கை ரிக் ஷா வராமல் இருந்தா சரி.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12-ஜூலை-202122:24:33 IST Report Abuse
K.n. Dhasarathan இதே கருத்தை பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பின் பற்ற தயாரா? உங்களை போன்றவர்களுக்கு ஓ.சி.யில் கிடைப்பதால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்று பேச கூடாது. அனைவரும் சர்வதேச என்னை சந்தை விலை உயர்வை எதிர்த்து போராடுவோம், தயாரா?
Rate this:
Cancel
Indian - chennai,இந்தியா
12-ஜூலை-202121:23:15 IST Report Abuse
Indian இது ஒரு நல்ல யூசனையாச்சே , அப்போ கார் கம்பெனியெல்லாம் மூடிவிடலாம் மெக்கானிக் கடைகளும் மூடிவிட யோசிக்கலாம். எப்போதாய்க்கு flight travel பற்றி யோசிக்க வேண்டாம் பின் அதுவும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X