பொது செய்தி

தமிழ்நாடு

இரவு நேரத்தில் மின் தடை; மரக்கிளை அகற்றி மின்சாரம் வழங்கல்

Added : ஜூலை 12, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை பகுதியில், மரக்கிளைகளால் ஏற்படும் மின் தடையை சரி செய்ய, மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். குளித்தலையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக சாலையோரத்தில் மின் கம்பிகள், மின் கம்பியில் மோதியவாறு உள்ள மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மின் இணைப்புக்கு மேல் உள்ள பகுதியில், தனியாக மின்

குளித்தலை: குளித்தலை பகுதியில், மரக்கிளைகளால் ஏற்படும் மின் தடையை சரி செய்ய, மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். குளித்தலையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக சாலையோரத்தில் மின் கம்பிகள், மின் கம்பியில் மோதியவாறு உள்ள மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மின் இணைப்புக்கு மேல் உள்ள பகுதியில், தனியாக மின் மாற்றி அமைக்கப்பட்டு, மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, இரவு நேரத்தில் தொடர் மழை, காற்று அடித்து மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, மின்வாரிய பொறியாளர் பன்னீர் கூறியதாவது: குளித்தலை பகுதியில், இரவு நேரத்தில் மழை, காற்றால் மரக்கிளைகள் முறிந்து மின் தடை ஏற்பட்டது. கூடுதலாக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், எந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பின்னர், மின் ஊழியர்கள் மூலம் மரக்கிளைகள் அகற்றப்பட்டு, மின்சார வினியோகம் சீர் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X