பொது செய்தி

இந்தியா

செப்.12-ல் 'நீட்' தேர்வு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: செப். 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுதும் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி
செப்.12-,நீட் தேர்வு, மத்திய கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான்

புதுடில்லி: செப். 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுதும் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி குறித்து, மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,


latest tamil news




நாடு முழுவதும், மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றும் விதமாக தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு முகமை இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்,நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக., வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு நாளை(ஜூலை13) கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு,மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் தவறு இல்லை. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.,

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
12-ஜூலை-202121:13:10 IST Report Abuse
Dhurvesh அது தான் நடக்காமல் இருக்க ஸ்டாலின் நினைத்தால் இந்த கரு நாகராஜ் தான் கெடுத்துவிட்டானே அப்புறமா என்ன
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
12-ஜூலை-202121:03:27 IST Report Abuse
dina "நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் தவறு இல்லை. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.", யோவ் ....இந்த டயலாக் எல்லாம் வேண்டாம் நீட் எக்ஸாம் எடுக்க முடியுமா முடியாதா இதேதான் கேள்வி..........
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஜூலை-202119:33:21 IST Report Abuse
Ramesh Sargam தேர்வு தேதி அறிவித்தவுடன் தமிழகத்தில் முதலமைச்சர் முதல் மற்ற பல அமைச்சர்களுக்கும் ஜுரம், காய்ச்சல். பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தனர். இனி மாணவ சமுதாயத்தை எப்படி சமாளிக்கப்போகிறார்களோ...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
12-ஜூலை-202121:14:36 IST Report Abuse
Dhurveshதேர்தல் வாக்குறுதி என்பது அவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் ஆளப்போகும் 5 வருடத்திற்கான வாக்குறுதிகள், அதை உங்கள் தலைவர் 50 நாட்களில் நிறைவேற்றவில்லையே என்று கேட்பது உங்கள் பார்வையில் சரியாக இருக்கிறதா? உங்கள் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றிவிட்டதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்? உங்கள் கட்சி 2019 தேர்தலின் சமயத்தில் 48 பக்கங்களில் 75 வாக்குறுதிகள் அளித்தது, அதில் பலவற்றை இன்று வரை நிறைவேற்றவில்லை, ஒரு சில இங்கே, இதற்கு பதில் சொல்லிவிட்டு திமுகவை கேள்வி கேட்க சொல்லுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X