மத்திய அமைச்சரின் புளூ டிக் நீக்கம்; டிவிட்டர் விளக்கம்

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: அமெரிக்க சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சமீபகாலமாக இந்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்முதல் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் அவ்வப்போது மோதி தனது பிரபலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் டிவிட்டருக்கு புதிய தொழில்நுட்ப

புதுடில்லி: அமெரிக்க சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சமீபகாலமாக இந்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்முதல் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் அவ்வப்போது மோதி தனது பிரபலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் டிவிட்டருக்கு புதிய தொழில்நுட்ப சட்டப்படி பல கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.


டிவிட்டரில் குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிக ஃபாலோயர் ஒரு நபருக்கு இருந்தால் அவர்களுக்கு ப்ளூ டிக் அந்தஸ்து வழங்கப்படும். ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் இவ்வாறு ப்ளூ டிக் பெறுவதை பலர் பெரும் லட்சியமாக வைத்துள்ளனர்.
latest tamil newsஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு டிவிட்டர் புளூ டிக் அளித்து அது அவர்களுடைய அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை அவர்களது ரசிகர்களுக்கு அடையாளம் காட்டி வருகிறது. குறிப்பிட்ட அளவுக்குமேல் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தால் இந்த ப்ளூ டிக் நீக்கப்படும்.


மேலும் டுவிட்டரின் வரம்புகளுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டால் ப்ளூ டிக் நீக்கப்படுமென டிவிட்டர் அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.latest tamil newsஅவரது பெயரில் அவர் ஏற்படுத்திய சிறிய மாற்றம் காரணமாக ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இந்திய ஐடி துறையிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தற்போது டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. பிரபலங்கள் தங்களது பெயரை இவ்வாறு மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படும் என்றும் விரைவில் அவருக்கு மீண்டும் புளூ டிக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
12-ஜூலை-202121:19:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி என்ன கேவலமான பொழைப்போ.. மக்களுக்கு என்ன செய்யணும்ன்னு கவலையில்லை.. க்காலி புளூ டிக்குக்கு அலையிறானுங்க. கருமம் சாமி..
Rate this:
Balaji - Chennai,இந்தியா
12-ஜூலை-202122:23:20 IST Report Abuse
Balajiஅவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். அவருடைய வேலையில் இதுவும் ஒன்று.... சமூக வலைத்தளம் பாரபட்சமின்றி நடக்கிறதா என்று பார்ப்பது அவர் வேலையே... ஒரு குவாட்டர் அடிச்சி வயக்கம் போல குப்புரோ படுத்துக்கோ நாயனா.. நமக்கு அதான் பெஷ்ட்டு......
Rate this:
12-ஜூலை-202123:03:15 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuஏன் இவ்ளோ கேவலமா பேசற குமாட்டுது. என்ன ஜென்மம் தெரியல...
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஜூலை-202121:17:32 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Twitter can close their business in India
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-ஜூலை-202107:32:57 IST Report Abuse
NicoleThomsonஅட போங்க இங்கே உடன்பிறப்புகளுக்கு அப்புறம் எப்படி நேரம் போகும் , குடும்ப கார்பொரேட் சேனலில் போர் அடிக்கும் நிகழ்ச்சி வரும்போது ட்விட்டரில் நேரம் கடத்தும் நிபுணர்களுக்கு வேற ஆப்பு அடிக்க வாய்ப்பு சொல்றீங்களா?...
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
12-ஜூலை-202121:00:20 IST Report Abuse
Balaji பெயரை வைத்து தருகிறார்களா அல்லது லாக்-ன் செய்யும் ID வைத்து தருகிறார்களா? லாக்-ன் வைத்து தருவது எப்போதும் டூப்ளிகேட் செய்யமுடியாது முறையாக இருக்குமே... அப்புறம் பெயரை எப்படி மாற்றினாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லயே.. இந்த சாதாரண லாஜிக் கூடவா டுவிட்டருக்கு தெரியாமல் போனது? ஏதோ போங்கு காட்டுகிறார்கள்... அழிச்சாட்டியம் மிக்கவர்கள்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-ஜூலை-202107:33:13 IST Report Abuse
NicoleThomsonதெளிவான கேள்வி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X