சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இன்னும் திருந்தலையே!

Added : ஜூலை 12, 2021
Share
Advertisement
இன்னும் திருந்தலையே!'ஆனாலும் ரொம்பத்தான், 'சீன்' போடுகிறார்...' என, மத்திய பிரதேச மாநில எரிசக்தி துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பிரதுமன் சிங் தோமரை, சொந்த கட்சியினரே கிண்டலடிக்கின்றனர். அமைச்சர் தோமர், விளம்பர விரும்பி. ஏழை, எளிய மக்களுக்கு தாரளமாக உதவி செய்தாலும், அதை பெரிய அளவில் விளம்பரப் படுத்தி, தற்பெருமை அடைவது, இவரது வழக்கம். சாலையை
அக்கம் பக்கம்


இன்னும் திருந்தலையே!



'ஆனாலும் ரொம்பத்தான், 'சீன்' போடுகிறார்...' என, மத்திய பிரதேச மாநில எரிசக்தி துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பிரதுமன் சிங் தோமரை, சொந்த கட்சியினரே கிண்டலடிக்கின்றனர். அமைச்சர் தோமர், விளம்பர விரும்பி. ஏழை, எளிய மக்களுக்கு தாரளமாக உதவி செய்தாலும், அதை பெரிய அளவில் விளம்பரப் படுத்தி, தற்பெருமை அடைவது, இவரது வழக்கம். சாலையை சுத்தப்படுத்துவது, கழிவு நீர் அடைப்பை ஊழியர்களுடன் இணைந்து சரி செய்வது என, அதிரடி காட்டுவார். இப்படி செய்யும்போது, தன்னுடன் ஏராளமான புகைப்படக்காரர்களையும் அழைத்துச் செல்வார். 'மக்கள் சேவை செய்வது என்றால், எனக்கு நேரம் காலமே தெரியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தயாராக இருப்பேன்' என, பெருமையுடன் கூறுவார். சமீபத்தில் இவர் குவாலியரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தவறி விழுந்தார்; காலில் நல்ல அடி; சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.

அப்போது நண்பர்களிடம் பேசிய தோமர், 'மக்களுக்கு சேவை செய்வதை, அதிகம் விளம்பரம் செய்து விட்டேன். அதனால் கடவுளாக பார்த்து, என்னை தண்டித்து விட்டார் என நினைக்கிறேன். பரவாயில்லை; இனிமேல் விளம்பரப் படுத்தாமல் உதவி செய்வேன்' என்றார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்த நண்பர்கள், 'இந்த விஷயத்தை, அவர் மனதுக்குள்ளேயே வைத்திருக்கலாமே; நம்மிடம் சொல்லி, மீண்டும் விளம்பரப் படுத்துகிறாரே... எப்போது தான் திருந்துவாரோ...' என, புலம்புகின்றனர்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X