சென்னை : 'தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடக விவாதங்களில், இனி அ.தி.மு.க., பங்கேற்காது' என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., அறிக்கை:
மக்களின் அடிப்படை தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றன. அது குறித்து சிறிதளவும் கவலைப்படாமல், ஊடக நிறுவனங்கள், அ.தி.மு.க., புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், கட்சி தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், விவாத தலைப்புகளை வைத்து, நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
எனவே, ஊடக விவாதங்களில், அ.தி.மு.க., சார்பில், கட்சி நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள்.
கட்சி பெயரை, வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி, யாரையும் தங்கள் ஊடகம் வழியாக கருத்துக்களை தெரிவிக்க, அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து, அவர்களை அ.தி.மு.க., என்று, அடையாளப்படுத்த வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE