தென் சீன கடலில் ஆதிக்கம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன் ''தென் சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கோர முடியாது. சர்வதேச தீர்ப்பாயத்துக்கு எதிராக, பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவத்தை களமிறக்குவோம்,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஆன்டனி பிளின் கென் எச்சரித்துள்ளார். தென்சீன கடல் பரப்பில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தென் சீன கடல் பகுதி முழுதும் தனக்கு சொந்தம் என, சீனா உரிமை கோரி
தென் சீன கடல் ,ஆதிக்கம் , சீனா, அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் ''தென் சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கோர முடியாது. சர்வதேச தீர்ப்பாயத்துக்கு எதிராக, பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவத்தை களமிறக்குவோம்,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஆன்டனி பிளின் கென் எச்சரித்துள்ளார்.
தென்சீன கடல் பரப்பில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தென் சீன கடல் பகுதி முழுதும் தனக்கு சொந்தம் என, சீனா உரிமை கோரி வருகிறது. இதற்கு, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தென் சீனக் கடல் எல்லை தொடர்பான வழக்கில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆதரவாக, சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.


latest tamil news






இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின் கென் கூறியுள்ளதாவது:
தீர்ப்பு வெளியான நான் காவது ஆண்டில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் அரசில் இடம்பெற்றிருந்த வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறிய கருத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம்.
அப்போது கூறியதுபோல் தென் சீன கடல் முழுதுக்கும் சீனா உரிமை கோர முடியாது.
இந்த விஷயத்தில், பிலிப்பைன்ஸ் மீது சீனா தாக்குதல் நடத்தினாலோ, பிலிப்பைன்ஸ் கப்பல்களை தடுத்து நிறுத்தினாலோ, அமெரிக்கா அதை ஏற்காது. பிலிப்பைன்ஸ் உடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி தேவைப்பட்டால், அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
13-ஜூலை-202109:43:01 IST Report Abuse
Neutral Umpire கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடறேன்னு வித்தைக்காரன் கடைசி வரைக்கும் சொல்லிக்கிட்டே இருப்பான் ...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13-ஜூலை-202104:30:31 IST Report Abuse
sankaranarayanan சீனாவின் அத்துமீறலை அடி கொடுத்து அடக்கிவைப்பதுதான் அமெரிக்காவின் கடமை. உஜ்ஜிகூர் மக்களை அடக்கி ஆள்வது - திபெத்தில் தனது அதிகாரத்தை பரப்புவது - இந்திய எல்லையில் ஊடுருவது - பிலிப்பைன்ஸ் கடலை சூழ்ந்து கொள்வது - வியட்நாமில் எல்லைத்தகராறு - தென்கொரியாவிடம் சன்டை - தைவானை ஆக்கிரமிப்பது - ஹாங்காங்கில் அமைதியை குலைப்பது - இவ்வளவு கொடூரமான மக்களுக்கு எதிரான செயல்புரியும் நாட்டை, ஏன் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.சீனா நாட்டை ஐந்துக்கு ஆறு பாகமாக துண்டாக்குங்கள் ஆளுக்கு ஒரு பாகம் என்ற கணக்கில் ஆளத்தொடங்குங்கள். எல்லாம் சரியாகிவிடும். உலக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூலை-202122:28:07 IST Report Abuse
தமிழவேல் அவர்களது கொட்டத்தை ஒடுக்கனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X