சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Added : ஜூலை 13, 2021
Share
Advertisement
கோவை;வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை, போலீசார் தேடி வருகின்றனர்.ரத்தினபுரி மருதக்குட்டி வீதியை சேர்ந்தவர் நடராஜ், 36; தனியார் நிறுவன மேலாளர். நடராஜ் பணிக்கு சென்றிருந்தார். அவரது மனைவி வெளியில் சென்று விட்டு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த, மூன்று பவுன் நகை, ரூ.10 ஆயிரம்

கோவை;வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை, போலீசார் தேடி வருகின்றனர்.ரத்தினபுரி மருதக்குட்டி வீதியை சேர்ந்தவர் நடராஜ், 36; தனியார் நிறுவன மேலாளர். நடராஜ் பணிக்கு சென்றிருந்தார். அவரது மனைவி வெளியில் சென்று விட்டு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த, மூன்று பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.மற்றொரு சம்பவம்ரத்தினபுரி, ஏழாவது வீதியை சேர்ந்தவர் ஓமனா, 60. நேற்று முன்தினம் ரத்தினபுரி, காந்திபுரம் ஏழாவது வீதியில், நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள், ஓமனாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை, பறித்து தப்பினர். புகாரின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, இவ்விரு சம்பவங்களையும், விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X