தமிழ்நாடு அரசு, 2,500 கோடி ரூபாயில், சென்னையில் நான்கு பூங்காக்களை உருவாக்க உள்ளதாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
'பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணுார், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில், 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மறுசுழற்சி'அதுமட்டுமன்றி, சென்னை மாநகராட்சியில், பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்றும் தெரிவித்திருந்தார்.
மோசமான கொரோனா பேரிடர் காலத்தில், மருத்துவ கருவிகள் வாங்கவும், மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை செய்யவுமே, மாநில அரசிடம் போதிய நிதி இல்லை. பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழப் போகிறதோ என்ற அச்சமும் நிலவிவரும் சூழல் இது. இதில், நான்கு பூங்காக்கள் எதற்கு; அவை என்ன செய்யப் போகின்றன; கொரோனாவை விட, இவை முக்கியமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, திருச்சியில் நேரு, '2,500 கோடி ரூபாய்க்கு பூங்காக்கள் மட்டும் அமைக்கப்படவில்லை. 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை துாய்மைப்படுத்தி, அவற்றின் நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்தார் அமைச்சர் நேரு.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, ஜூலை 9ம் தேதி வெளியிட்டுள்ள தகவல் ஒன்று கவனம் பெறுகிறது.வெளிச்சந்தைஅதில், பல்வேறு மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கடன் பெறவுள்ள தொகைகளுக்கான அனுமதி விபரங்கள் அடங்கிஉள்ளன.தமிழகம் இன்றும், வரும் 19, ௨௭ம் தேதிகளிலும், தலா 1,500 கோடி ரூபாய் கடன் வாங்கவிருக்கிறது. ஏற்கனவே ஜூலை 6ம் தேதி, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. ஆக மொத்தம், இந்த மாதம் மட்டும் 6,500 கோடி ரூபாய் கடன் வாங்கவுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் 5,000 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதம் 4,000 கோடி ரூபாயும் கடன் வாங்கத் திட்டமிட்டுஉள்ளது.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE