
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பொது, சென்னை மாகாணம் (Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிர்வாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. ஆந்திர மாநிலம் கேரளா மாநிலம் கர்நாடக மாநிலம் இவை உருவான நாள். 1 ST NOVEMBER 1956. பிரித்தது போக மீதியுள்ள பகுதி சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது. பின்னாளில் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்ய பட்டது(1967 ல்). அப்போதும் கோடை கால தலைநகராக உதகமண்டலம் விளங்கியது. பின்னாளில் அந்த வழக்கம் கைவிடப்பட்டு சென்னையே தூக்கி பிடிக்கப்பட்டது. இதை ஏன் செய்தார்கள். உதகமண்டலம் கோடை கால தலைநகராக இருந்திருந்தால் அந்த பகுதியும் வளர்ச்சி பெற்று இருக்குமே. இதனை ஏன் செய்தார்கள், 1967 க்கு பின் ஆண்ட திராவிட அரசியல் வாதிகள்? இதை தொடர்ந்து இருந்தாலே இன்றைய கொங்கு மண்டல பிரச்னை வந்திருக்காதே. அத்தனையும் சென்னைக்கே கொண்டு சென்றார்கள். திராவிட அரசியல்வாதிகளை மீறி கொங்கு பகுதி தானாக வளர்ந்தது. தமிழகம் ஆண்ட திராவிட அரசியல் வாதிகள் ஒன்றையும் செய்யவில்லை என்பதே உண்மை. BHEL(திருச்சி), ஆவடி TANK தொழிற்சாலை, Integral Coach Factory (ICF) ரயில்வே, போன்ற எந்த பெரிய அரசு நிறுவனங்களும் பாண்டிய மண்டலத்திலோ, சோழ மண்டலத்திலோ, கொங்கு மண்டலத்திலோ பெரிய அளவில் தொடங்க படவில்லை என்பதே உண்மை. இவை அனைத்தும் 1967 க்கு முன் தொடங்கப்பட்டவை. கொங்கு மண்டலம் அப்பகுதி மக்களின் உழைப்பு, தனியார் பங்களிப்பிலேயே வளர்ந்தது. பாண்டிய மண்டலமோ இன்று வரை மோசம். இந்தியாவிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதை கடைசியாக இருந்தது பாண்டிய சோழ மண்டலத்தில்தான். இத்தனைக்கும் இந்திய நிதி அமைச்சர் பதவியை குறைந்தது 10 ஆண்டு காலம் அலங்கரித்தவர் அந்த பகுதிக்காரர்தான். அவர் ஒன்றும் செய்யவில்லை. பாண்டிய மண்டலமும் சோழ மணடலமும் அதிகமான இந்து கோவில்களை உடைய பகுதி. அவற்றை ஆன்மீக சுற்றுலா பகுதிகளாக வளர்த்திருந்தாலே, அப்பகுதிகள் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். அதாவது மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன், கன்னியாகுமரி பகவதி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவாரூர் தியாகேசர், கும்பகோணம் கும்பமேளா, தஞ்சை பிரகதீஸ்வரர், திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம், குலசை முத்தாரம்மன் தசரா விழா, திருவண்ணாமலை கிரி வலம்(இன்னும் சொல்லி கொண்டே போகலாம்) இவைகளை பிரபலப்படுத்தி, வடநாட்டு யாத்திரை புண்ய பகுதிகளைவிட மிக சிறப்பான ஆன்மீக சுற்றுலா தலங்களாக உருவாக்கி இருக்க முடியும்.(திருப்பதி, சபரிமலை போல புண்ணிய பகுதிகளாக அறிவித்து இருந்தாலே இவை மிக பெரிய ஆன்மீக சுற்றுலா பகுதிகளாக உருவாகியிருக்க முடியும்). ஆன்மீக சுற்றுலா மூலம் சோழ, பாண்டிய மண்டலங்கள் மிக பெரிய வளர்ச்சியை தானாகவே அடைந்திருக்கும் கடந்த 50 வருடங்களில், திருப்பதியும், சபரிமலையும், மிக பெரிய வளர்ச்சி மற்றும் வருமானத்தை கொண்ட ஆன்மீக தலங்களாக உருவாகியுள்ளன. இதற்கு காரணம். அந்த பகுதி ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு. மற்றும் அந்த கோவில்களை வாரியங்களாக உருவாக்கி இந்து தெய்வ நம்பிக்கை உள்ள நபர்களிடம் ஒப்படைத்தது. ஆனால் இங்கே என்ன நடந்தது. பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து கோவில்களின் வளர்ச்சியை தடுத்து மற்ற மதங்களின் வளர்ச்சிக்கு துணை போனார்கள் திராவிட ஆட்சியாளர்கள். கோவில்களை, இந்து நம்பிக்கை உள்ளவர்களிடம் நிர்வாகத்தை(மற்ற மத ஆலய மசூதி நிர்வாகம் போல) கொடுத்து இருந்தாலே இந்த மண்டலங்கள், ஆன்மீக சுற்றுலா தலங்களாக வளர்ச்சி அடைந்திருக்கும். தமிழக அரசு கோவில்களை வரைமுறைப்படுத்தும் வேலையை மட்டும் செய்து இருந்தாலே போதும். இந்து கோவில்களுக்கு முன்னால் ஈ வே ரா வின் சிலையை வைத்து இந்து கோவில்களை கேவலப்படுத்தும் வேலையை மட்டுமே செய்தார்கள் திராவிட ஆட்சியாளர்கள். அது மட்டும் அல்ல இந்து கோவில் வளங்களை சூறையாடினார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.(சாமி இல்லை ஆனால் சாமிகோவில் வருமானம் மட்டும் பகுத்தறிவு அரசாங்கத்திற்கு வேண்டும்.). இப்படி செய்தால் எப்படி வரும் வளரச்சி. அதனாலேயே கொங்கு சோழ பாண்டிய பல்லவ மண்டல சிந்தனை, மக்களுக்கு வந்துள்ளது............ இன்னுமொரு தகவல் தமிழ் மக்களின் சிந்தனைக்கு நான்கைந்து இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளன. தெலுங்கு பேசும் மாநிலம் இரண்டாக உள்ளது. இதனால் தெலுங்கோ இந்தியோ அழிந்து விடவில்லை. இன்னும் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டுதான் உள்ளது. தமிழும், தமிழ் மக்களும் நான்கு மாநிலங்களாக இருந்தால் போட்டி போட்டுக்கொண்டு(ஆந்திரா தெலுங்கானா போல) நன்றாகத்தான் வளர்வார்கள். நிர்வாக வசதிக்காக எப்படி மாவட்டங்களை பிரித்தோமோ அது போலத்தான் இதுவும். மாவட்டங்களை பிரித்தது நிர்வாக வசதிக்கு சரி என்றால், நிர்வாக வசதி மற்றும் வளர்ச்சிக்காக மாநிலங்களை பிரிப்பதும் சரியே. அம்பேத்கார் அவர்களும் 2 கோடி பேருக்கு ஒரு மாநிலம் பிரிப்பது நிர்வாகத்துக்கு நல்லது என்றே கூறி உள்ளார். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் வளர்க பல்லவ மண்டலம் வளர்க சோழ மண்டலம் வளர்க கொங்கு மண்டலம் வளர்க பாண்டிய மண்டலம் வெல்க தமிழ் மற்றும் தமிழக மக்கள் பாரத் மாதா கி ஜெய்