கொங்கு நாடு என்பது பிரிவினை அல்ல; அது வளர்ச்சியின் அடையாளம் | Dinamalar

'கொங்கு நாடு என்பது பிரிவினை அல்ல; அது வளர்ச்சியின் அடையாளம்'

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (157) | |
கோவை : ''கொங்குநாடு என்பது பிரிவினை அல்ல. அது வளர்ச்சியின் அடையாளம்' என, கொ.மு.க., தெரிவித்துள்ளது.கொங்குநாடு முன்னேற்ற கழக உயர்நிலைக் கூட்டம், கோவையில் அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில், கோவையை தலைநகராகக் கொண்டு கொங்குநாடு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று 1994ல், ஒட்டன்சத்திரம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து
கொங்கு நாடு, கோவை, கொமுக

கோவை : ''கொங்குநாடு என்பது பிரிவினை அல்ல. அது வளர்ச்சியின் அடையாளம்' என, கொ.மு.க., தெரிவித்துள்ளது.

கொங்குநாடு முன்னேற்ற கழக உயர்நிலைக் கூட்டம், கோவையில் அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில், கோவையை தலைநகராகக் கொண்டு கொங்குநாடு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று 1994ல், ஒட்டன்சத்திரம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், 2009 கோவை மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. கொ.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, கொங்கு நாடு மாநிலம் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.


latest tamil news


'இது பிரிவினை வாதம் அல்ல. வளர்ச்சியின் அடையாளம். இது போல் ம.பி., பீஹார், உ.பி., போன்றவை பிரித்து புது மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டன. தனி மாநிலமாக அறிவிக்க அனைத்து தகுதிகளும் உள்ளது. உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும். இங்குள்ள, 11 மாவட்டங்களில் 10 லோக்சபா, 61 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும். தொழில் வளர்ச்சி பெருகும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X