பள்ளிகளை திறக்க வேண்டும்: அரசிடம் 7 சங்கங்கள் மனு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : 'பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளின் ஏழு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு சங்கங்களின் நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் கமிஷனர் நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:
school, reopen, regular class, பள்ளிகள்

சென்னை : 'பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளின் ஏழு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு சங்கங்களின் நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் கமிஷனர் நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களிடம் டி.சி., இல்லாமல் எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது. 'எமிஸ்' எண்ணை மட்டும் வைத்து மாணவர்களை சேர்க்கும் முறைகளை மாற்ற வேண்டும். கல்வி கட்டணத்தை பள்ளிகளின் செலவுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும்.


latest tamil news


மாணவர்கள் ஆன்லைன் வழியில் பாடம் படிப்பது, முழுமையான நிறைவை தராது. நேரடியாக வகுப்பறைகளில் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.எனவே வல்லுனர் குழு அமைத்து உரிய வழிகாட்டுதலுடன் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி, தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பாடத் திட்டம், தேர்வு முறை சீர்திருத்தம், பாட புத்தக தயாரிப்புக்கான வல்லுனர் குழுக்களில், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினருக்கும் இடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dilli -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202120:57:43 IST Report Abuse
Dilli குழந்தைகளுக்கு தடுப்பூசி இட்டு காத்த பின் பள்ளிகளை திறக்கலாம், ஆனால் அதற்க்குள் பாதி தனியார் பள்ளிகள் ஏலத்திற்க்கு வந்துவிடும்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
13-ஜூலை-202115:53:14 IST Report Abuse
தத்வமசி பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதே என் போன்ற பெற்றோர்களின் கோரிக்கை. சிங்கபூரை பார் என்கிறோம். அவர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் கோவித் தொற்று குறைந்தபோது உடனே பள்ளிகளை மழலையர் வகுப்பு முதல் திறந்தனர். பிறகு இப்போது கடந்த ஜூன் மாதம் தொற்று அதிகமான போது பள்ளிகளை மூடி விட்டனர். தொற்று குறைந்தவுடன் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர். ஆக இந்த இந்த தொற்றுக்கு நிரந்ததர தீர்வு தெரியவில்லை. மூன்றாவது அலை வருமா ? வராதா என்றெல்லாம் திடமாக சொல்வதற்கு இல்லை. பெற்றோர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இன்று பிள்ளைகளின் நிலைமையைக் கண்டு பள்ளியை கட்டாயம் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சுமார் என்பது சதவிகிதத்திற்கும் மேலே உள்ளனர். ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகளை தாமதம் இன்றி திறப்பது நல்லது.
Rate this:
Cancel
13-ஜூலை-202113:12:07 IST Report Abuse
மனுநீதி முதலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி பள்ளிகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் மொபைல், லேப்டாப் என்று குழந்தைகள் பாழ்பட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X