இருவேறு தடுப்பு மருந்துகளை கலக்கக்கூடாது- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | |
Advertisement
ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கை. இதனைத்தொடர்ந்து தற்போது தடுப்பு மருந்து கலவை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் முக்கிய விஞ்ஞானி இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். இவர் இரண்டு வெவ்வேறு தடுப்பு மருந்துகளை கலப்பது குறித்து கருத்து

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கை. இதனைத்தொடர்ந்து தற்போது தடுப்பு மருந்து கலவை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.



latest tamil news



இந்த அமைப்பின் முக்கிய விஞ்ஞானி இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். இவர் இரண்டு வெவ்வேறு தடுப்பு மருந்துகளை கலப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பு மருந்துகளை கலப்பதால் 2 இரண்டிலும் உள்ள நோய் எதிர்ப்புசக்தி ஒன்றாக கலந்து நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் என சில நாடுகள் நம்பி வருகின்றன. ஆனால் இது தவறு. ஆதாரப்பூர்வமான, ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்ட முறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.


latest tamil news



இதுபோல இருவேறு தடுப்பு மருந்துகளை கலப்பதால் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளின் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஒரு தடுப்பு மருந்தை எத்தனை டோஸ் செலுத்தவேண்டும் என்று கணக்கு உள்ளது.
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது என்று எச்சரித்துள்ளார். எனவே அனைத்து நாட்டு மருந்து அங்கீகாரக் குழுக்களும் இதனை கவனமாகப் பின்பற்ற உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X