நல்ல நேரம் பார்த்து லியோனி பதவியேற்பு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (84) | |
Advertisement
சென்னை : தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக நல்ல நேரம் பார்த்து லியோனி பதவியேற்றார்.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை பாடநுால் கழக தலைவராக முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் குறித்து லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரது நியமனத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் பாடநுால் கழக தலைவராக லியோனி
Leoni, Dindigul Leoni, TN Textbook Corporation

சென்னை : தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக நல்ல நேரம் பார்த்து லியோனி பதவியேற்றார்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை பாடநுால் கழக தலைவராக முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் குறித்து லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரது நியமனத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாடநுால் கழக தலைவராக லியோனி நேற்று பதவியேற்றார். நேற்று காலை 11:00 மணிக்கு பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென காலை 9:30 மணிக்கே வந்து பதவியேற்றார். இதுகுறித்து விசாரித்த போது நேற்று காலை 10:30 முதல் 12:00 மணி வரை எமகண்டம். அதனால் 11:00 மணிக்கு பதவியேற்காமல் காலை 9:15 மணி முதல் 10:15 வரை நல்லநேரம் என்பதால்அந்த நேரத்தில் பதவியேற்றதாக கூறப்பட்டது.


latest tamil news




கருணாநிதி பெயர்


பதவியேற்ற பின் லியோனி அளித்த பேட்டி: தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது முதல்வரின் மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை. அதற்கு உதவும் வகையில் செயல்படுவேன். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் இடம்பெற முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202113:32:06 IST Report Abuse
Aanandh நல்லநேரம் பார்த்து சனியன் பிடித்தது.
Rate this:
Cancel
Murthy - CHENNAI,இந்தியா
17-ஜூலை-202108:22:11 IST Report Abuse
Murthy தி மு க விடம் எதிர்பார்த்ததுதான் ...ஆ ..இவ்வளவு கேவலம் தேவை இல்லை ..
Rate this:
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
16-ஜூலை-202111:06:39 IST Report Abuse
Babu Desikan அது என்ன நெற்றியில் குங்குமம்? ஏன் இந்த புது கேலிக்கூத்து? பாட நூல்களில் இனி ஒன்றியத்தை திணிப்பார், கட்டை மரத்தின் தியாகங்கள் இனி இடம் பெரும்? இன்னும் ஒரு படி மேலே போய் ஒன்றியத்திலேயே சிறந்த ச.ம.உ உதயநிதி என்று யுனெஸ்கோ சொன்னதாக அப்பட்டமாக பொய் சொல்வார்கள். ஏற்கெனவே நீட் தேர்வை ரத்து செய்து புரட்சி செய்தார்கள், மாநிலம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு, குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் பட்டுவாடா, பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்கள், கழகத்தவர்களுக்கு இலவச மணல் அள்ளும் உரிமை, கோயில் சொத்துக்களை அபகரித்தல் என்று புரட்சி மேல் புரட்சி செய்து காட்டி விட்டார்கள். இதற்கு மேல் டிகிரி டிகிரி லியோனி அவர்கள் கல்வியில் மென்மேலும் புரட்சி செய்யப் போகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X