சுதந்திர வர்த்தக உடன்படிக்கை: இந்தியாவுக்கு வந்தது இங்கிலாந்து ஆப்பிள்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
லண்டன்: இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இங்கிலாந்து இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து - இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.238 கோடியாக இருந்தது. வரும், 2030ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.50 ஆண்டுகளில் முதல்முறைகடந்த மே மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த

லண்டன்: இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இங்கிலாந்து இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து - இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.238 கோடியாக இருந்தது. வரும், 2030ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.



latest tamil news




50 ஆண்டுகளில் முதல்முறை


கடந்த மே மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சி மாநாட்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும் விரிவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர். அந்த ஒப்பந்தத்தின் அடையாளமாக கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது.


latest tamil news



இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-202118:35:19 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman தமிழ் நாட்டுக்காரன் இந்த ஆப்பிள் வாங்க போவது இல்லை. அப்புறம் என்ன? கவலையை விடுங்க. வெள்ளை கரண் ஆப்பிள் விற்பனை தானே நின்று விடும்.
Rate this:
Cancel
13-ஜூலை-202118:20:38 IST Report Abuse
அப்புசாமி அந்த ஆப்பிளைப் பாருங்க. புது செவப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி எவ்ளோ அழகாக்கீது. நம்ம கலீஜ் ஆப்பிளை எவன் சாப்புடுவான்? ஆத்மநிர்பரா கீழே இறக்குமதி பண்ணி இந்திய விவசாயிக்கு பாடம் புகட்டுங்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-202117:28:41 IST Report Abuse
Pugazh V ப்ப்பா....Purushothaman - Cuddalore, இந்த வாசகரின் விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது. யோசித்து பார்ப்பதே இல்லை. கண்மூடித்தனமான.ஏன்... வெறித்தனமான விசுவாசம். என்னவோ இங்கிலாந்து ஆப்பிள் வியாபாரிகள் விற்பனை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாதிரியும், இந்தியா வாய்ப்பு அளிக்கிற மாதிரி எழுதறார். இப்பவே ஆப்பிள் கிலோ ரூ.130 என்கிறார்கள். இனி...லோக்கல் ஆப்பிள் எவனாவது வாங்குவானா? ஆத்மநிர்பார், இந்திய விவசாயிகள் நலம்.... எல்லாம் உலகமகா ஏமாற்று வேலை என்று புரிகிறதா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X