தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்கிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 8 ம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு
தமிழகம், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, தடுப்பூசி, Tamil nadu, vaccine, Chief Minister Stalin, Stalin, Prime Minister Modi, narendra modi, MKstalin,

சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 8 ம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழகத்திற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கவில்லை. இதனால், பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்திற்கு ஆயிரம் பேருக்கு 302 பேர் என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 533,493 மற்றும் 446 என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


latest tamil news


எனவே, தமிழகத்திற்கு ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மேலும், சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


நிதியமைச்சருக்கு கடிதம்

வெளிநாடுகளிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-ஜூலை-202121:09:51 IST Report Abuse
NicoleThomson இது நாள் வரை கொடுத்ததை வரவு செலவு கணக்கு கொடுத்துகிட்டே வந்திருந்தா இப்போ நீ கேட்கும் பொது மக்களும் உணருவாங்க , ஆனா நாம தான் விஞ்ஞான ஊழல்வாதிகள் ஆயிற்றே . மத்தவங்க மேல பழிய போட்டே காலத்தை ஓட்டும் கார்பொரேட் கழகம் ஆயிற்றே எல்லாத்தையும் கருப்பு மார்க்கெட்டில் விற்று விட்டு மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறிவிட்டாள் போகிறதென்று இருப்பீர்களா?
Rate this:
Cancel
Dilli -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202120:52:23 IST Report Abuse
Dilli ஐயா பாரத் ஏழைத்தாயின் புதல்வருடைய உண்மையாக விசுவாசிகளே தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற நீங்களும் குரல் கொடுக்கலாமே, அல்லது செங்கல்பட்டு உற்பத்தி ஆலையை குத்தைகைக்காவது கொடுக்க சொல்லுங்கள், நீங்கள் செய்ய மாட்டீர்கள், அதுசரி தேர்தல் கூட்டணி விஷயங்களே நீங்கள் சக்தி குழும வீட்டிலும், ஐயா நியுஸ் கோயல் முன்னிலையில் நட்சத்திர ஓட்டலிலும் தானே முடிவு செய்தீர்கள், மக்கள் செத்தாலும் பக்தாளுக்கு காசேதான் கடவுளடா...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
13-ஜூலை-202122:35:33 IST Report Abuse
madhavan rajanஎல்லா அறிவு ஜீவிகளும் திமுகவிலேயே இருக்கிறார்கள். பெண் போலீஸ் பாத்ரூம் போனால் ஐயோ என்று அலறினார்கள். மொட்டை மாடியில் லாப் டாப் வைத்திருந்தாள் அலறினார்கள். இப்போது ஒட்டு மெஷின் பத்தி வாயே திறக்கலையே. தனக்கு வந்தா ரத்தம் கேசு....
Rate this:
14-ஜூலை-202104:51:35 IST Report Abuse
மனுநீதிPlease change your user name...
Rate this:
Cancel
13-ஜூலை-202118:15:44 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசு தானாகவும் குடுக்க மாட்டாங்க. நம்மளையும் இறக்குமதி செய்ய உட மாட்டாங்க. ஏதோ, தாங்க மட்டுமே யோக்கிய சிகாமணிகள்னு நினைப்பு. சரி..சரி.. ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழுவை அனுப்புங்க.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
13-ஜூலை-202122:33:41 IST Report Abuse
madhavan rajanஇறக்குமதிக்குத்தான் டெண்டர் விட்டு பல்பு வாங்கிவிட்டார் ஸ்டாலின். இன்னும் என்ன? பி டி ஆர் அமெரிக்காவிலிருந்து அள்ளிக் கொண்டுவந்து கொட்டுவேன் என்று வீராப்பு பேசி பல்பு வாங்கினார். இன்னும் என்ன? எந்த ஒரு வெளி நாடும் ஒரு மாநிலத்தோடு ஒப்பந்தம் போடாது. ஏதாவது பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் நிக்காது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X