தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்கிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்| Dinamalar

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்கிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (21) | |
சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 8 ம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு
தமிழகம், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, தடுப்பூசி, Tamil nadu, vaccine, Chief Minister Stalin, Stalin, Prime Minister Modi, narendra modi, MKstalin,

சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 8 ம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழகத்திற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கவில்லை. இதனால், பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்திற்கு ஆயிரம் பேருக்கு 302 பேர் என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 533,493 மற்றும் 446 என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


latest tamil news


எனவே, தமிழகத்திற்கு ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மேலும், சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


நிதியமைச்சருக்கு கடிதம்

வெளிநாடுகளிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X