" ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (123) | |
Advertisement
சென்னை: தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை
ActorVijay, ChennaiHC, Tax, Rolls Royce, Car, Fine, நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ், வரி, சென்னை, உயர்நீதிமன்றம், அபராதம்

சென்னை: தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


நடிகர் விஜய், 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிவரித்துறை உத்தரவிட்டது. நுழைவு வரிவிதிக்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் விஜய். காரை பதிவு செய்யாததால் பயன்படுத்த முடியவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றார்.

latest tamil news
மேலும் நீதிபதி கூறுகையில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.' என கருத்து தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
12-ஆக-202110:42:24 IST Report Abuse
RADE மற்றவர்கள் திருடுகிறார்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நாமும் அதை செய்ய துணித்து நியாயபடுத்த கூடாது நமது செயலை. ஊர் அறிய நிவாரண நிதி குடுத்துட்டு இப்படி யாருக்கும் தெரியாமல் வரியை குறைக்க சொல்லுவது மரியாதைக்கு உரிய செயல் இல்லை. இதற்கு வரியா முழுவது கட்டி நிதியை குறைத்து குடுத்து இருந்தால் நீதி மன்றம் அலுவலர்கள், நீதிபதி, அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர் என்று எல்லோருக்கும் காலா விரயம் ஏற்பட்டு இருக்காது, மக்கள் வரி பணமும் மிச்சம் ஆகி இருக்கும். இந்த மாறி விஷயத்தில் தான் எல்லாம் பகுத்து அறிவு புகுத்தி பார்க்கணும்..
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
15-ஜூலை-202108:53:02 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM எஸ் எம் சுப்ரமநீயயம் தமிழ் நாடு குன் கா வாழ்க சினிமாவில் நடித்தால் பதவிக்கு வந்து மக்களை கொள்ளையடித்த கொள்ளையடிக்க துடிக்கும் சினிமா வீரர்களுக்கு பாடம் புகட்டும் நாள் நெருங்கிவிட்டது
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
14-ஜூலை-202112:51:07 IST Report Abuse
sankar எட்டு கோடி காரை வீட்டில் வைத்து கொண்டு அதற்க்கு வரி காட்டாமல், இவர் சைக்கிள் இல் வந்து வோட்டு போடுவாராம் ,அதற்கு மக்களுக்கு நல்லது சொன்னாராம்,நாணம் இல்லாமல் இவரின் தந்தை இவரை முதல்வர் ஆகி அழகு பார்க்க விரும்புகிறார் . நாட்டில் நடக்கும் கொடுமையை எங்கே சொல்வது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X