சென்னை : சொகுசு காருக்கு வரி விதிக்க தடைகேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக, வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகி டிரெண்ட் ஆனது.
![]()
|
இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ‛‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு'' என கண்டித்தார்.
![]()
|
‛‛மாசம் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறவன் கூட ஒழுங்கா வரி காட்டுவான்... 100 கோடி வாங்கி என்ன பிரயோஜனம்''. ‛‛கோடிகளில் சம்பளம் வாங்கும் உங்களால் சில லட்சங்களில் வரி கட்ட முடியாதா... ஊருக்கு தான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோ...''. ‛‛தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் எல்லாம் அரசாங்கத்தை பற்றி ஏகத்திற்கும் விமர்சனம் செய்யும் இவர், முதலில் ஒழுங்காக வரி கட்டிவிட்டு பின்னர் மற்றவர்களை குறை சொல்லட்டும்''. ‛‛நாங்க ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் வச்சுருக்கோம், சொகுசு கார் அல்ல, அதனால் வரி கட்ட மாட்டோம்...''.
‛‛விஜய் முதலில் சரியான வக்கீலிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நாட்டுக்கு வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அதை செய்யாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விக்கப்படும். பிறகு எதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் விஜய். ஒருவேளை இந்த விஷயம் கூட அவருக்கு தெரியாதோ...''. இப்படி பலரும் கருத்து பதிவிட்டு வருவதோடு வேடிக்கையான பல மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய்க்கு எதிராக டுவிட்டரில் நெகட்டிவ் கமெண்ட்கள் வைரலாக, அவரது ரசிகர்கள் வழக்கம் போல் விஜய் செய்தது எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE