கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: தொற்று எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதையடுத்து, அங்கு ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் கோவிட் வைரஸ் 2வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதையடுத்து, அங்கு ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
latest tamil news


கேரளாவில் கோவிட் வைரஸ் 2வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது: கேரள மாநிலத்தில் ஏற்கனவே மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பூந்துராவை சேர்ந்த 41 வயது நபர். மற்றொருவர் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஆவார்.latest tamil news

இவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

INDIAN Kumar - chennai,இந்தியா
14-ஜூலை-202111:03:41 IST Report Abuse
INDIAN Kumar வெளிநாட்டில் உள்ளவர்களின் தொடர்பு கேரளதுக்கு அதிகம் உண்டு , அதுவாக கூட இருக்கலாம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஜூலை-202115:26:29 IST Report Abuse
M  Ramachandran கோவை கன்யாகுமரி மாவட்ட மக்களே அதிக கவனம் தேவை அதிகாரிகளை நம்ப வேண்டாம். பணம் பார்ப்பவர்கள்..
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
13-ஜூலை-202115:35:33 IST Report Abuse
MANI DELHIகோவை கேரளா எல்லையை இழுத்து மூடுங்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்துங்கள். ஏற்கனவே மருந்துகழிவின் தொல்லை வேறு....
Rate this:
Hari - chennai,இந்தியா
13-ஜூலை-202118:27:08 IST Report Abuse
Hariசரியாகத்தான் சொன்னீர்கள ஆனால் விடியல் அரசு மக்களை விண்ணுலகம் அனுப்புவதில் வெற்றி அடைந்தேதீரும்...
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
13-ஜூலை-202115:24:45 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எல்லா புதிய நோய்களும் கேரளாவில் தான் முதலில் வருகிறது. பறவைக்காய்ச்சல் , கோரோணா , இப்போது ஜிகா. கேரளாவின் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் அனைத்தும் பக்கத்து இளிச்சவாய மாநிலம் தமிழகத்தில் தான் கொட்டுகிறார்கள். அங்குள்ள சுகாதார துறை அலுவலகர்கள் ரொம்ப "ஸ்ரிக்ட்" டாம் என அம்மாநில மக்கள் பெருமையாக சொல்லுவார்கள். போலீஸ் கூட படு "ஸ்ரிக்ட்" டாம். கிராமத்தில் ஆளே இல்லாத சாலையில் ஒன்வேயில் சென்றால் கூட ஓடி வந்து பிடித்தது கொள்வார்களாம். அந்த அளவுக்கு கெடுபிடியாம். பின்னே எப்படி இந்த வைரஸ்கள் கேரளாவிற்குள் நுழைகிறது என்று தெரியவில்லை. மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு.பிரனாயி விஜயன் அவர்கள் தனியாக புலன்விசாரனை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவே மூன்றாம் அலை கோரோணா தாக்குதல் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது கேரளாவில் இன்னும் இரண்டாவது அலையே அடங்க மாட்டேன் என்கிறது. ஆகவே மாண்புமிகு திரு.பிரனாயி விஜயன் அவர்கள் நேரடியாக களம் காண வேண்டும்.
Rate this:
Hari - chennai,இந்தியா
13-ஜூலை-202118:28:19 IST Report Abuse
Hariஅந்தமானுக்கு ரயில் விடடாலும் அது கேரளா வழியாகத்தான் போகணும்னு மலையாளி சொல்லுவான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X