பொது செய்தி

இந்தியா

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை புனேவின் சீரம் நிறுவனம் வரும் செப்., மாதம் முதல் உற்பத்தி செய்ய உள்ளது.இது தொடர்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், ஆண்டுதோறும் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தொழில்நுட்ப பரிமாற்றம் ஏற்கனவே
 ஸ்புட்னிக் வி, தடுப்பூசி, சீரம் நிறுவனம், Serum Institute,  Sputnik V,September, Russian Maker

புதுடில்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை புனேவின் சீரம் நிறுவனம் வரும் செப்., மாதம் முதல் உற்பத்தி செய்ய உள்ளது.

இது தொடர்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், ஆண்டுதோறும் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தொழில்நுட்ப பரிமாற்றம் ஏற்கனவே துவங்கிவிட்டது. முதல் பேட்ஜ் தடுப்பூசி, செப்., மாதம் உற்பத்தி செய்யப்படும் என நம்புகிறோம். செல் மற்றும் வெக்டார் மாதிரிகள் ஆகியவை சீரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து விட்டோம். அவர்கள் பெற்று கொண்டு விட்டனர். டிஜிசிஐ அனுமதியுடன், சீரம் நிறுவனம் உற்பத்தியை துவங்கிவிட்டது என தெரிவித்து உள்ளது.


latest tamil news


சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்புடன் கூட்டணி அமைத்ததில் பெருமை அளிக்கிறது. செப்., மாதத்தில் சோதனை முயற்சியாக உற்பத்தி துவங்கப்படும். தொடர்ந்து வரும் மாதங்களில் பல லட்சம் டோஸ் உற்பத்தி செய்யப்படும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி கிடைக்க செய்வோம் என தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
13-ஜூலை-202117:56:42 IST Report Abuse
Senthil kumar விரைவாக தயாரித்து, விரைவாக அனைத்து மக்களுக்கும் தடுப்புஊசி செலுத்தி உறுதிப்படுத்துங்கள். ஒரு சில இடங்களில் அரசியில் கட்சிகாரர்கள் முறைகேடான வழியில் தடுப்பூசி டோக்கன் பெறுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X