பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருச்சூர்: கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கோவிட் தாக்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு

திருச்சூர்: கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கோவிட் தாக்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



latest tamil news



கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு திரும்பினார். பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார். ஒன்றரை ஆண்டுக்கு பின் மீண்டும் அவருக்கு கோவிட் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், 'டில்லி செல்வதற்கு முன் கோவிட் பரிசோதனை மேற்கொண்டேன். ஆன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்றும் ஆர்டி பிசிஆர் சோதனையில் தொற்று உறுதி என்றும் வந்துள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தற்போது, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்' என்றார்.


latest tamil news



திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் ரீனா கூறுகையில், 'கோவிட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. எனவே, அச்சப்பட தேவை இல்லை. 2வது முறையாக கோவிட் தொற்று ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவும் அதுபோல இருக்கலாம். நாங்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.

அந்த மாணவிக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-ஜூலை-202119:30:34 IST Report Abuse
Nagarajan D என்னாது மறுபடியும் முதலிலிருந்தா? தாங்காதுடா சாமி பூமி.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஜூலை-202119:26:31 IST Report Abuse
Ramesh Sargam முதல் தொற்றுக்கு பிறகு இவர் தடுப்பூசி ஏதாவது போட்டு கொண்டாரா..?
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
14-ஜூலை-202105:31:38 IST Report Abuse
Sathish கேரளாவில் இதுவரை பதினெட்டு முதல் நாற்பத்தி நான்கு வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை....
Rate this:
Cancel
13-ஜூலை-202119:13:29 IST Report Abuse
ஆரூர் ரங் கிருமியூனிஸ்டூ😡 களுக்கு ஓட்டுப் போட்ட கேரளா கிருமிகளின்😩 தலைநகராக ஆகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X