பெங்களூரு:பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,யுமான ரம்யாவை, மீண்டும் அரசியலுக்கு வரவழைக்க, அக்கட்சி மாநில தலைவர் சிவகுமார், தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ், கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ரம்யா. 2013ல் நடந்த மாண்டியா லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.ஆனால், 2014ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். 2017ல், காங்கிரஸ் சமூக வலை தள பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.
யார் கண்களிலும் படாமல் இருந்தார். திடீரென தனது நணர்களுடன் வெளிநாட்டில் வசிப்பதாக தகவல் பரவியது.இந்நிலையில், 2023ல் கர்நாடக சட்டசபை தேர்தல் வருவதால், ரம்யாவை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்த, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், அரசியலுக்கு வரும்படி ரம்யாவிடம் பேசி வருகிறார். அவரும் மாண்டியாவில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்., முன்னாள் தேசிய தலைவர் ராகுலுக்கு, ரம்யா நெருக்கமானவர் என்பதால், டிக்கெட் பெறுவதிலும் சிரமம் இருக்காது என்பது சிவகுமாரின் திட்டம்.ம.ஜ.த., கோட்டையான மாண்டியாவில், கே.ஆர்.பேட் தொகுதியில், பா.ஜ., நுழைந்துள்ளது. அந்த கோட்டையை தகர்க்க ரம்யா களமிறங்குவது உறுதி என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE