சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எப்படி சமாளிப்பது?

Added : ஜூலை 13, 2021
Share
Advertisement
எப்படி சமாளிப்பது?'மழை விட்டும் துாறல் விடாத கதையாக இருக்கிறதே...' என முணுமுணுக்கிறார், மத்திய பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான்.இவர் முதல்வராவதற்கும், இவரது தலைமையில் மாநிலத்தில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைந்ததற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா.காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான சிந்தியா, தனக்கு

அக்கம் பக்கம்


எப்படி சமாளிப்பது?



'மழை விட்டும் துாறல் விடாத கதையாக இருக்கிறதே...' என முணுமுணுக்கிறார், மத்திய பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான்.இவர் முதல்வராவதற்கும், இவரது தலைமையில் மாநிலத்தில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைந்ததற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா.
காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.,வுக்கு தாவி, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்தார். பா.ஜ.,வில் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக காத்திருந்தார். இதற்கிடையில், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

தற்போது சிந்தியாவுக்கு பதவி கிடைத்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால், 'சிந்தியா தொல்லை இனி இருக்காது. டில்லிக்கு போய் விடுவார்' என, நிம்மதி பெருமூச்சு விட்டார் சவுகான்.ஆனால் மத்திய பிரதேசத்தில் கட்சியின் மாவட்ட செயலர், தேர்தல் பொறுப்பாளர் பதவிகளில், தன் ஆதரவாளர்களுக்கு கணிசமாக இடம் ஒதுக்கக்கோரி, சவுகானுக்கு மீண்டும் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்காக, தன் ஆதரவாளர்களுடன் உள்ளடி வேலை பார்த்து வருகிறார்.
'காங்கிரசில் இருந்த போது கமல்நாத்துக்கு எதிராக என்ன செய்தாரோ, அதே வேலையை இப்போது எனக்கு எதிராக செய்கிறார். இதை எப்படி சமாளிப்பது' என, புலம்புகிறார் சிவ்ராஜ் சிங் சவுகான்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X