சட்டங்கள் திருத்தப்படும்: அமித் ஷா அதிரடி தகவல்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
காந்திநகர் : ''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலையில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.இதில் பங்கேற்ற
சட்டங்கள் திருத்தப்படும் அமித் ஷா, அதிரடி தகவல்

காந்திநகர் : ''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலையில் சிறப்பு
கருத்தரங்கம் நடந்தது.இதில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:போலீசார் மீது இரண்டு குறைகளையே கூறுகின்றனர். ஒன்று, எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை; மற்றொன்று வரம்புக்கு மீறி செயல்படுகின்றனர்.

போலீசார் நடுநிலையோடும், நியாயமாகவும் செயல்பட, குற்ற விசாரணையில் சரியான சாட்சிகள் கிடைக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக இதை நாம் அணுக வேண்டும்.அந்தக் காலத்தில் கூறுவதுபோல மூன்றாம் நிலை சித்ரவதை, இனி பயன்படாது. அதில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள்சட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேவை.அறிவியல்பூர்வமான விசாரணையின் வாயிலாக எந்த குற்றத்திலும் சரியான, நியாயமான சாட்சிகள், ஆதாரங்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
15-ஜூலை-202109:45:41 IST Report Abuse
Chandrasekaran Balasubramaniam முதலில் ஆட்டம் போடும் PCR ACT ஐ உடனடியாக நீக்க வேண்டும்.
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
14-ஜூலை-202122:25:09 IST Report Abuse
Anbu அதற்குத் துணிவு வேண்டும் ........... அந்தத் துணிவு அமித் ஷாவிடம் இல்லை .............. வேஸ்ட் ...............
Rate this:
Cancel
raguram - madurai,இந்தியா
14-ஜூலை-202121:33:11 IST Report Abuse
raguram அந்த சைக்கிள் கார்களுக்கு பதில் புதிய சைக்கிள் கார்கள் போல பல ஓட்டைகளை அடைத்த புதிய சட்டங்கள் இப்போதய சூழ்நிலைக்கு அவசியம். பழய வழக்குகள் இருந்தால் ஜாமீன் கொடுக்ககூடாது.வாய்தா வாங்குவதை குறைக்க வேண்டும். நீட் போல வக்கீல்களுக்கு இந்திய நீதி நூல்கள், வள்ளலார், ரமணர், வேதாத்திரி மகரிஷி போன்றவர்களின் அந்தந்த மாநில மகான்களின் போதனகளில் தேர்வு வைக்க வேண்டும், சீனியர்கள் இரண்டு வருடத்திற்கு கற்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X