மேகதாதுவில் அணை எடியூரப்பா முரண்டு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு : ''மேகதாதுவில் அணை கட்டுவது, எங்கள் உரிமை. அதை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, கர்நாடகா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா கூறிஉள்ளார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு துவங்கி உள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை
மேகதாது, அணை எடியூரப்பா முரண்டு

பெங்களூரு : ''மேகதாதுவில் அணை கட்டுவது, எங்கள் உரிமை. அதை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, கர்நாடகா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா கூறிஉள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு துவங்கி உள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கர்நாடகாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு நேற்று வந்த மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கும்படி, முதல்வர் எடியூரப்பா மனு கொடுத்தார்.


பின், எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டது. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழகம் எடுத்துள்ள முடிவு பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், கர்நாடகா அரசு, மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீரும். அது எங்கள் உரிமை. அதை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.மேகதாது அணை கட்டுவதற்கான பணியை விரைவில் துவங்குவோம். இது தொடர்பாக யாருடனும் பேச்சு நடத்த விரும்பவில்லை. கர்நாடகாவில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்து, பிரச்னைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு உதவி செய்வதாக, மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
15-ஜூலை-202111:21:53 IST Report Abuse
INDIAN Kumar தமிழகத்துக்கு உரிய தண்ணீர் ஆண்டுதோறும் கொடுத்து விட கர்நாடகா அரசு உறுதி கொடுத்தால் நல்லது . இதை காங் பாஜக எந்த கட்சி ஆண்டாலும் கொடுக்கணும்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-ஜூலை-202122:56:21 IST Report Abuse
J. G. Muthuraj பாதிக்கப்பட்ட மாநிலங்கள் உங்கள் திட்டத்தை எதிர்ப்பது அவர்களது உரிமை......
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
14-ஜூலை-202121:54:42 IST Report Abuse
bal தமிழ் நாடு வேண்டும் என்று கொக்கரித்து அண்ணா பெரியார் வாழ்த்துக்கள்...ஒன்றாக இருந்த சென்னை மாகாணம் நன்றக இருந்திருக்கும்...திமுக பிரிவினை வாதத்தால் வந்த கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X